Sunday, 22 May 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 15

Rate this posting:
{[['']]}

அப்பா செய்த கணக்கு


தனக்கென பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்தவாரே மனைவி பாக்கியம் கொண்டு வந்து கொடுத்த சர்க்கரை போடாத கொத்தமல்லித் தண்ணியை வேண்டா வெறுப்புடன் சுவைத்தவாறு அன்றைய
ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்திருந்த பிரபல்யமான சுடோகு (Sudoku ) என்ற 9 x 9 கட்டங்கள் 1 முதல் 9 வரை உள்ள எண்களோடு தன் மூளைக்கு பயிற்சி கொடுக்க சண்முகலிங்கம் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் முதலாம் வகுப்பில் தேறிய கொழும்பு பல்கலைக்கழக கணிதப்பட்டதாரி. அதுவும் பிரபல மாமேதை கணிதப் பேராசிரியர் எலியேசரின் அன்புக்கும் பாராட்டுக்கும் பாத்திரமான மாணவன். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவிகிடைத்தும் அதைத் தனது சொந்த ஊரில் கடைசி காலத்தில தந்தைக்கு அருகே இருக்க வேண்டும் என்ற காரணத்தால் உதறித்தள்ளவிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ஆசிரியரானவர்..;

யாழ்ப்பாணத்தில் அந்த கல்லூரியின் பெயர் பிரபல்யமாகி, தீவுப் பகுதிகளில் இருந்து வந்து, மாணவர்கள் அக்கல்லூரியில் சேர்ந்து படிக்க சண்முகவிங்கம் மாஸ்டரே காரணமாக இருந்தார் என்பது பலருக்குத் தெரியும். தலமை ஆசிரியராகக் கூடிய வாய்ப்புகள் அவருக்கு கிட்டியும் கல்லூரியை பரிபாலனம் செய்வதில் நேரத்தை விரையம் செய்ய விரும்பாது தொடர்ந்து மாணவர்களுக்குத் தனது கணித அறிவை புகட்டிவந்தவர். தான் படிப்பித்த கல்லூரியில் சதுரங்க விளையாட்டையும் அறிமுகப்படுத்தி மாணவர்களின் மூளைகளை தர்க்கரீதியாகச் சிந்திக்கத் தூண்டியவர். அக்கல்லூரியல் பத்து வருடங்களாக் கணித ஆசிரியராக கடமையாற்றிவருபவர். பல என்ஜனியர்கள் , விரிவுரையாளர்கள் , வைத்தியர்கள், கணக்காளர்கள் போன்றோரை உருவாக்கியவர். ஒரு காலத்தில் கணிதப் பேராசிரியர் சுந்தரலிங்கம் இருந்தது போல், தற்காலத்தில லிங்கம் பெயர் நிலைக்க ஒரு சண்முகலிங்கம என்று பலர் பேசுமளவுக்கு பிரபல்யமானார் சண்முகலிங்கம் மாஸ்டர். அவரை சண் மாஸ்டர என்று மாணவர்கள் அழைப்பார்கள.; உயர்தர வகுப்புக்கான அவர் எழுதிய “தர்க்க கணிதம்”; புத்தகத்தை ஓடித் தேடி வாங்கி சித்தியடைந்தவர்கள் பல மாணவர்கள். ஒரு முறைக்கு இரண்டு தடவை விளக்கமாய் சொல்லிக் கொடுத்தும் புரிந்து கொள்ள முடியாத பல மாணவர்களின் தலையை முத்தமிட்ட முடக்கிய அவரது வலது கைவிரல்கள், தான் பதம் பார்த்த மாணவர்களின் தலையை எண்ணிக்கையை வைத்திருக்கிறதோ என்னவோ தெரியாது.

சண்முகலிங்கத்தின் ஒரே மகன் கணேஷலிங்கம். தகப்பனின்;திறமையில் நம்பிக்கை இல்லாதவன்.. யாழ்ப்பாணத்தில் சண்; மாஸ்டரை அறியாத மாணவர்கள் இல்லை என்று சொல்லலாம்.. அதுவும் யாழ்ப்பாணத்தில் இருந்து பொறியியல் துறையில் பல்கலைக் கழகத்திற்கு பிரவேசித்த நூற்றுக்குத் தொன்னூறு விகிதமான மாணவர்கள் சண் மாஸ்டரின் பார்வையின் இறுக்கத்திலும், குட்டின் கைவண்ணத்தில, தர்க்க ரீதியான விளக்கத்திலும் வளர்ந்து பொறியியலார்கள், கணக்காளர்கள் ஆனவர்கள்.

“இலங்கையில், கணிதத்தில தமிழ் மாணவர்களின் தரத்திற்கும் கனடாவில் மாணவார்ளின் தரத்திற்கும் எத்தனையோ வித்தியாசம். என்ன சொன்னாலும் அந்த தரத்திற்கு கனடா கிட்ட வராது” என்று கனடா பிரஜையான தனது சகோதரிக்கு பெருமை அடித்துக் கொள்வார் சண்;. ஆனால் தனது ஒரே மகன்
கணேஷலிங்கம் கணக்கில் உதவி கேட்டு தன்னிடம் வராததையிட்டு தனது மனைவி பாக்pயத்திடம் அடிக்கடி குறைபட்டு கொள்வார் சண்.;. கணேஷலிங்கம் தன் விருப்பப்படி படித்தது வேறு கல்லாரியில். காரணம் அப்பா படிப்பிக்கும் கல்லூரியில் படித்தால் அவருக்குக் கீழ் கணக்கு படிக்க வேண்டி வருமே என்ற பயமோ தெரியாது. 

“அப்பா, அவன் போக்கிற்கு விட்டு விடுங்கள். தேவைப்பட்டால் உங்களிடம் வந்து கேட்பான்தானே. யாழ்ப்பாணத்தில்; நீங்கள் படித்த காலத்தில் டியூசனை நம்பி படித்த பிள்ளைகள் போல் இல்லை. இக்காலத்துப் பிள்ளைகள். படிப்புக்கும் முறையும் வேறுபட்டது. கொம்பியூட்;டர், கல்குலேட்டர் உதவியை நம்பி படிப்பவர்கள். தற்கால மாணவர்கள். உங்களுடைய பழைய படிப்புக்கும் முறை இங்கு அவ்வளவுக்குப் பொருந்தாது” என்று பாக்கியம் எடுத்துச் சொன்னாலும் சண்முகலிங்கம் அதை ஏற்றுக் கொள்வதாகயில்லை. தன்னைப் போல் , தன் மகனும் கணக்கில் நிபுணாக வரவேண்டும். .டொக்டரின் மகன் டொக்டராகும் போது ஏன் என் மகன் கணக்கில் நிபுணாக முடியாது?, என்பது தான் அவரது ஒரே குறிக்கோளும் வாதமும். சண் மாஸ்டருக்கும் மகனுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு அவர் மனைவி பாக்கியம் தலையிட்டுத் தீர்த்து வைப்பாள். சண்டைகள் அடிக்கடி வந்து போனாலும் மாதம் சம்பளம் வந்;ததும் மகனுக்கு, பொக்கட் செலவுக்கு நூறு ரூபாய் கொடுக்க மட்டும் தவறமாட்டார். என்னவென்றாலும் தனது பெயர் சொல்ல “லிங்கம்” வழிவந்தவனல்லவா தன் மகன் கணேஷலிங்கம்?.
******
பள்ளிக்கூட கணக்கு புரேஜெக்டை செய்து முடிக்க முடியாமல் திணரிக் கொண்டிருந்து மகனைப் பார்த்ததும் சண் மாஸ்டரால் பொறுக்க முடியவில்லை. எதோ கணக்கொன்றுக்கு பதில் காணமுடியாமல் அவன்
திணறுகிறான் என்பதை அவருக்கு புரிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

 “என்னடா கணேஷ் என்ன பிரச்சனை? தலைiயை அடிக்கடி சொரிந்து. மண்டையை போட்டு உடைக்கிறாய். எதற்காக அந்தரப்படுகிறாய். கணக்கில் எதாவது பிரச்சனையா?”

“இல்லை அப்பா. என்னுடைய கொம்பியூட்டருக்குள் வைரஸ் வந்துவிட்டது. அதாலை டீச்சர் தந்த கணக்கு புரேஜெக்டை செய்ய முடியாவில்லை. நாளைக்கு புரேஜெக்டை டீச்சருக்கு கொடுத்தாக வேண்டும்.

கொம்பியூட்டர் இல்லாமல் அதை செய்வது கஷ்டம்.”.

“கல்குலேட்டரைப் பாவிக்க வேண்டியது தானே”
“கல்குலேட்டர்; பட்டரியின் சார்ஜ் போயிட்டுது. அதாலை சரியாக வேலை செய்யுதில்லை”

“எங்கை எனக்கு காட்டு; உன்டை புரேஜெக்டை. என்னால் முடிந்தால் உனக்கு உதவுகிறன்”, தானாகவே மகனுக்கு உதவி முன் வந்தார் சண்.

“என்ன அப்பா என்னோடை ஜோக்கா விடுகிறியள்?. கொம்பியூட்டர் இல்லாமல் இதை செய்யும் அளவுக்கு நீங்கள் அவ்வளவு கெட்டிக்காரரா?. சும்மா என் நேரத்தை வீண் அடிக்காதீர்கள். நான் போய் என்னுடைய நண்பன் சுரேஷன்; லப்டொப்பை வாங்கி வந்து செய்யப் பாக்கிறன்.” என்றான் தந்தையின் திறமைமேல் மேல் நம்பிக்கை இல்லாத கணேஷ்.

“இல்லயடா ராசா. கொம்பியூட்டரில் செய்யும் போது விளங்கி செய்யமுடியாது. நான் சில நிமிடங்களில் உனக்கு விளங்க வைத்து பதிலை கண்டுபிடிக்கிறன்”.

“வேண்டாம் அப்பா. என்னுடைய புரேஜெக்ட் உங்களுக்குப் புரியாது. என்டை புரேஜெக்டோடை நீங்கள் விளையாடாதீர்கள். நான் சுரேஷிடம் போய் அவனுடைய லப்டொப்பை வாங்கி வந்து செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு தந்தையின் பதிலை எதிர்பார்க்காமல் அவசரம் அவசரமாக வெளியே புறப்பட்டுப் போனான்

அரைமணி நேரத்தில் நண்பனின் லப்டொப்போடு கணேஷ் திரும்பினான். தனது மேசையில் தன் புரேஜெக்ட் விளக்கத்தோடு செய்து விடை கண்டு பிடித்துவைத்திருப்பதை; பார்த்தபோது கணேசுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனால்; நம்ப முடியவில்லை. இது அப்பாவின் வேலை தான் என்றது அவன் மனம்.

“என்ன அப்பா இது உங்கள் வேலைiயா”

“ஓமடா ராசா. நீ வந்த பிறகு உனக்கு விளங்கப்படுத்துவோம் என்று காத்திருக்கிறன்.”

“என்ன பகிடியா விடுகிறியள். உங்களுடைய விடை பிழை என்பது நிட்சயம். கொம்பியூட்டரில் நான் போட்டு வரும் விடையைப் பாருங்களேன் அப்பத் தெரியும்.”

“சரி உன் இஷ்டம் போல் செய்து பாரேன்”

கணேஷ் கொம்பியூட்டரில் பல நிமிட நேரம் செலவழித்து விடையை கண்டுபடித்த சந்தோஷத்தில் “ஐ காவ் டன் இட் (I have done it) என்று தன் இரு கைகளையும் மேலை தூக்கி கொக்கரித்தான்.

“நல்லது. இனி கொம்பியூட்டரில் கிடைத்த விடையோடு நான் கொம்பியூட்டர் பாவிக்காமல் ஐந்து நிமிடத்தில் செய்து கண்டு பிடித்த விடையுடன் ஒப்பிட்டுப் பார்;. செய்த முறைக்கு விளக்கமும் கொடுத்திருக்கிறன்”,
என்றார் சிரித்தபடி சண்;.
“அப்பா. நிட்சயமா உங்கள் விடை பிழையாகத் தான் இருக்கப்போகுது. உங்கள் விருப்பத்தை நான் ஏன் மறுப்பான். உங்கள் விடை பிழையாக இருந்தால் என்ன பந்தயம்.?”

“விடை பிழையாக இருந்தால் நான் உனக்கு இனி மாதம் மாதம் பொக்கட் செலவுக்கு இருநூறு ரூபாய் தருவன். விடை சரியாக இருந்தால் இனி நீ என்னிடம் மறுக்காமல் பொறுமையாக இருந்து கணக்கு கேட்டு
படிக்க வர வேண்டும். என்ன சம்மதமா?

“இந்த பந்தயத்துக்கு நான் சம்மதம் அப்பா”

கணேஷ் இரண்டு விடைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தான். இரண்டு விடைகளும் சரியாக இருந்ததை அவனால் நம்பமுடியவில்i. அடடா என் அப்பா தன்னுடைய தலைக்குள் கொம்பியூட்டர் ஒன்றை மறைத்து
வைத்திருக்றாரா? சற்று யோசித்தான் கணேஷ்.

“என்னடா ராசா என்ன யோசிக்கிறாய்? விடைகள் ஒத்துப் போகிறதா?
“தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன் அப்பா. நாளையில் இருந்து எனக்கு ஒரு மணி நேரம் கணக்கு படிக்க ஒதுக்கி வையுங்கள். ஆனால் மாதம் ஒரு முறை எனக்கு தரும் நூறு ரூபாயை நிறுத்த வேண்டாம்.”

“நூறு ரூபாய் என்ன அடுத்த மாதம் முதல்; இருநூறு ரூபாய் தருnகிறேன் நீ தோழ்வியை ஒப்புக் கொண்டு என்னிடம்;கணக்கு படிக்க சம்மதித்தற்கு” என்றார் புன்சிரிப்புடன் சண் மாஸ்டர்.

கணேஷ் தனது அப்பாவை இறுக்கக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான். சண்; மாஸ்டருக்கு தன் ஆயுள் நீண்டுவிட்டது போன்ற ஒரு உணர்வு.
******