{[['
']]}

வியாபாரம்
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - வள்ளுவர்
முந்தி யிருப்பச் செயல் - வள்ளுவர்
ராம்
தனது தந்தையுடன் மளிகை
கடையில் வியாபாரம் பார்த்து
வந்தான், வார இறுதி
நாள்களில் இருவரும் சேர்ந்து
கடையை அடைத்து விட்டு
அருகில் உள்ள சின்ன
ஊர்களில் போய் சந்தை
போடுவார்கள். மகன் தந்தையிடம்
கேட்டான், ஏன்பா நம்ம
கடையில இருந்தே
விற்றால் நமக்கு லாபம்
தானே, ஏன் இந்த
வேகாத வெயிலில் வந்து
சந்தை போட வேண்டும்
என்று கேட்டான்.
இல்லப்பா
நம்ம ஊரில் இருந்து
கடை நடத்தி வந்தால்
நமக்கு உலக பொருளாதாரம்
பற்றி தெரியாமல் போகும்,
அது மட்டும்மில்லாமல் நமது
வியாபார வட்டம் நம்ம
சின்ன ஊரிலே முடிந்து
போய்விடும், அதனால் தான்
நான் வெயில், மழையை
பொருட்படுத்தாமல் ஒவ்வொரு
சனி கிழமையும் இங்கு
வந்து கடை போடுகிறேன். அதுமட்டும்மில்லாமல் நம்ம
கடைகளில் உள்ள சில
உயர்ந்த தர பொருள்களை
இந்த சந்தையில் விற்கும்
போது அந்த பொருள்களை
சின்ன ஏழையும் பயன்படுத்துவான்,
நமக்கும் அந்த பெரிய
கம்பெனி பொருள் விற்பதால்
அதிக லாபம் கிடைக்கும்
என பேசிக்கொண்டே சந்தையை
அடைந்தனர்.
இருவரும்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில்
கடையை போட்டனர். வெயில்
இறங்க இறங்க கூட்டம்
சந்தையில் கூடியது, கிராம
மக்கள் என்பதால் பலரும்
பொருளை பேரம் பேசித்தான்
வாங்கினார்கள். ராமுவிற்கு
ஒன்றும் புரியவில்லை, நம்ம
ஊரில் அப்பா ஒரு
பைசா கூட குறைக்கமாட்டார்,
இங்க மட்டும் ஏன்
குறைக்கிறார் என்றும் புரியவில்லை? பிறகு கூட்டம்
சிறிது குறைந்த பிறகு
மெதுவாக தனது தந்தையிடம்
கேட்டான், ஏன் அப்பா
அவர்கள் கேட்கும் குறைந்த
விலைக்கு பொருள்களை விற்கிறீர்கள்? என்று
கேட்டான்.
அதற்கு
ராமுவின் அப்பா, இன்றைக்கு
இதுவரை நமக்கு மொத்த
வியாபாரம் சுமார் 2000 ரூபாய்,
இதுவே நம்ம ஊரில்
இருந்தால் வெறும் 500 ரூபாய்
மட்டும் தான் வியாபாரம்
நடக்கும். இங்கே
நான் 15% லாபம் வைத்து
பொருள்களை விற்பேன், ஆனால்
நமது கடையில் நான்
30% லாபம் வைத்து விற்பேன். நமக்கு ஒரே
நாளில் வியாபாரம் 2000 ரூபாய்
வியாபாரம் மற்றும் நிகர
லாபம் 300 ரூபாய்; அதுவே நமது
ஊர் என்றால் 500 ரூபாய்
வியாபாரமும் 150 லாபமும் தான்
கிடைக்கும் என்று வியாபார
நுணுக்கங்களை சொல்லி கொண்டு
இருந்தார்.
இருவரும்
பேசிக்கொண்டு இருக்கும் போது
ஒரு பெரியவர் அங்கு
வந்து தம்பி, அடுத்த
மாதம் பொண்ணுக்கு கல்யாணம்
வைத்திருக்கேன், அதற்கு தேவையான
சமையல் பொருள்களை கொஞ்சம்
குறைந்த விலையில் நீங்க
தான் எற்பாடு செய்து தரனும்
என சொல்லிக்கொண்டு ஒரு
ஆயிரம் ரூபாய் முன்பணமும்
தந்தார்.
ராமுவின்
அப்பா இருக்கட்டும் அய்யா,
முதலில் நீங்கள் தேவையான
பொருள்களை சொல்லுங்கள், நான் பொருள்களை முதலில்
எற்பாடு செய்கிறேன், பணம்
பிறகு பெற்று கொள்கிறேன்
என சொல்லிவிட்டார்.
ராம்
வழக்கம் போல அப்பாவிடம்,
ஏன் அப்பா முன்பணம்
வாங்கவில்லை என கேட்டான்,
ராம் உனக்கு ஒரு
வியாபார தந்திரமும் தெரியவில்லை,
அவர் இந்த ஊரில்லே
உள்ள ஒரு பெரிய
மனிதர், அவர் சொன்னா
இந்த ஊரில் உள்ள
அனைவரும் அவர் சொல்லுக்கு
கட்டுபட்டு தான் நடக்கணும்.
எனக்கும் உனக்கு ஒரு
சொந்த கடையை இந்த
ஊரில் வைத்து கொடுக்க
ரொம்ப நாள் ஆசை,
அது தான் இன்று
நான் முன்பணம் கூட
வாங்கவில்லை. ஒவ்வொரு
வாரமும் நாம் இங்கு
வந்து சந்தை போட்ட
பயன் இது தான்.
அந்த பெரியவரை வைத்தே
நமது சின்ன கடையை
இந்த ஊரிலும் திறப்போம்
என்று கூறிய தந்தையை
வியப்புடன் பார்த்தான்.
அவன்
வியப்பதை பார்த்துவிட்டு; ஒரு
வியாபாரி எந்த நேரத்திலும்
லாப நோக்கத்துடனும், வியாபார
தந்திரதுடன் தான் சிந்திக்க
வேண்டும் என்று கூறி
விட்டு இருவரும் வியாபாரத்தை முடித்துவிட்டு நடந்தனர்.
அவர்கள்
இருவரும் வேகமாக வண்டியை
தள்ளி கொண்டு நடந்தனர்,
அப்போது அந்த ஊரில்
உள்ள பள்ளியின் தலைமை
ஆசிரியர் ராம் அப்பாவிடம்
வந்து வணக்கம் சொல்லிவிட்டு,
ஒரு நன்கொடை புத்தக்கத்தை
நீட்டினர், உடனே ராம்
அப்பா எதற்கு என்று
கேட்டார்.
எங்கள்
பள்ளி மழை காலத்தில்
அதிகம் ஒழுகுகிறது, அதற்கு
ஊரில் உள்ள வியாபாரிகள்,
முக்கியபுள்ளிகள், பண்ணையார் அவர்களை
பார்த்து நன்கொடை வசூல்
செய்து புதிய கீற்று
மேய முடிவு செய்துள்ளோம்
என்று கூறினார்.
உடனே
தனது பையில் இருந்து
ஒரு
500 ரூபாய் எடுத்து நன்கொடையாக
கொடுத்தார். தலைமை
ஆசிரியர் நன்றியுடன் பெற்று
கொண்டார்.
சிறிது
நேரம் நடந்தவுடன் ராம்
அப்பாவை பார்த்து சொன்னான்,
அப்பா நீங்க நன்கொடை
கொடுத்தது பின்னாளில் பள்ளியில்
உள்ள சத்துணவு சமையல்
பொருள்களில் சப்ளே செய்ய
தானே என்று சிரித்து
கொண்டே எல்லா தொழில்
ரகசியமும் தெரிந்தது போல
சொன்னான்.
இதை
கேட்டதும் ராம் அப்பா
கோபத்துடன் சொன்னார், வியாபாரத்தில் தர்மம் பார்க்க கூடாது; தர்மத்தில் வியாபாரம் பார்க்க கூடாது.
ராம்
வியாபாரம் என்பது ஒரு
நாளில் கற்று கொள்வது
கிடையாது என்று ஒரு
முடிவுக்கு வந்தது மட்டும்மில்லாமல் வியாபாரம் என்பது
ஒரு அனுபவ கலை
எனவும் உணர்ந்தான். தனது தந்தையிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை நன்றாக கற்றான்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - வள்ளுவர்
முந்தி யிருப்பச் செயல் - வள்ளுவர்
வள்ளுவனின் குரலை போல ராமின் தந்தை ராமிற்கு வியாபாரத்தில் உள்ள அணைத்து நெளிவு சுளிவுகளை கற்று தந்து வியாபாரத்தில்
வெற்றி அடைய வைத்தார்.