Friday, 3 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 30

Rate this posting:
{[['']]}
தந்தை எனும் போதினிலே….

 கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தார் நாராயணன். இன்னும் திறக்கவேயில்லை. ஐந்தாம் முறையாகத் தட்டிவிட்டுக் காத்திருந்தார். கதவையொட்டிய சன்னல்களும் மூடப்பட்டிருந்தன. எப்படியும் திறப்பார்கள் என்ற நம்பிக்கை குறையாமல் காத்திருந்தார் நாராயணன். ஆனால் பெரும்பாலான கதவுகள் தட்டியவுடன் திறப்பதில்லை என்பதுதான் உண்மை. மனக்கதவை இறுக்கமூடிக்கொண்டவர்கள் மரக்கதவை எப்படி திறப்பார்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்று யேசு சொன்னதெல்லாம் பலிக்க வெகுகாலங்கள் ஆகும்.
                   உள்ளே குரல் கேட்க சிந்தை கலைந்து ஆர்வமானார் நாராயணன்.
                   கதவு திறந்தது. தலையை நுழைக்குமளவுக்குக் கதவு திறந்து ஒருவர் எட்டிப்பார்த்தார்.
                   என்ன வேணும்?
                   என்போட பேர் நாராயணன்.. நான் தாமரையோட அப்பா கிட்டப் பேசணும்.
                   நீதான் நாராயணனா?
                   ஆமாம்.
                   போய்யா வெளியே.. என்றார் எடுத்தவுடன்.  நாராயணனுக்குப் புரிந்தது. அவர்தான் தாமரையின் அப்பா.
                   சார்.. ஒருநிமிஷம் என்னை உள்ளே வர அனுமதி தாங்க.. உங்ககிட்ட அரைமணி நேரம் பேசிட்டு உடனே போயிடறேன்..
                   ஒரு தடவ சொன்னா உனக்கு உரைக்காதா? போய்யா.. உன் கிட்ட பேச எதுவுமில்ல..
                   உங்க கோபம் நியாயமானதுதான்.. ஆனாலும் என்பக்கம் நியாயத்தையும் கேளுங்க.. அதுக்கப்புறம் எந்த முடிவு எடுத்தாலும் சம்மதம்தான்.
                   அவர உள்ள கூப்பிடுங்கப்பா.. என்று ஒரு பெண்குரல் உள்ளே கேட்டது. தாமரையாகத்தான் இருக்கும்.
                   போடி.. குடிய கெடுத்தவளே..செருப்படி விழும்.. போ..
                   நாராயணன் பிடிவாதமாகக் கெஞ்சினார்.
                   என்ன நினைத்தாரோ தாமரையின் அப்பா உள்ளே அனுமதித்தார் வேண்டாவெறுப்பாக.
                   உள்ளே தாமரை நின்றுகொண்டிருந்தாள். அவள் அருகே அவளின் அம்மா. வயதான ஒரு பாட்டி தரையில் அமர்ந்திருந்தார். நாராயணன் தயக்கமாக நின்றுகொண்டிருக்க தாமரையின் அப்பா உக்காரு.. என்றபடி ஒரு சேரை எடுத்துப்போட்டு தானும் அருகிலிருந்து சோபாவில் உட்கார்ந்துகொண்டார்.
                   நாராயணன் பேச ஆரம்பித்தார்.
                   சின்ன வயசுலேயே நான் தாயை இழந்தவன். என்னோட அப்பாதான் எனக்கு எல்லாமும். தாய்க்குத் தாயா தகப்பனுக்குத் தகப்பனா நின்னு வளர்த்தாரு.. எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தாரு.. சாதி, மதம் எல்லாத்தையும் தாண்டி மனுஷங்கதான் முக்கியம்னு சொல்லி வளர்த்தாரு. உறவுகள் காசிருந்தா தூக்கி வச்சிக் கொண்டாடும்.. காசில்லாதவன் இந்த உலகத்துலே வாழ தகுதியற்றவன்.. கிட்டத்தட்ட அவன் அனாதை மாதிரி.. அதனால கௌரவத்தோட வாழற அளவுக்கு சம்பாதிக்க ஒரு வேலை தேடிக்கன்னு சொன்னாரு.. நான் ரொம்ப படிக்க விரும்பலே.. காச சம்பாதிக்கணும்னு சின்ன வயசுலேர்ந்து எங்கப்பா சொன்னதையும் கேட்காம சம்பாதிக்கிற ஆசையிலே பல வேலைக்குப் போனேன். இப்ப ஒரு நிலையான பிசினஸ். எங்கப்பா சொன்னதால சாதி, மதம் முக்கியமில்லேன்னு ஒரு அனாதை விடுதிக்குப்போய் என்னோட மனைவியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சங்கரன் ஒரே பையன். அவனோட  போதும்னு நிறுத்திக்கிட்டோம்.. பத்து வருஷம் ரத்தப் புற்றுநோயோட போராடி என் மனைவி இறந்துபோயிட்டா..  அவனுக்கு விவரம் தெரியறப்பா அவனுக்கு அம்மா இல்லாமபோயிட்டா என்ன மாதிரியே. நான் எங்கப்பா மாதிரி என் புள்ளய வளர்த்தேன். ஆனா படிப்பு முக்கியங்கறத உணரவச்சி படின்னு வற்புறுத்திப் படிக்கவச்சேன்.. படிக்கறப்பதான் உங்க பொண்ணு தாமரையோட பழக்கம்.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மனசார விரும்பறாங்க.. நாம ஏன் தடையா இருக்கணும்.. உங்ககிட்டே நேர்மையா பொண்ணு கேட்க என் புள்ள வந்தான்.. ஆனா அவன பலரும் பாக்க செருப்பால அடிச்சி விரட்டிட்டீங்க..
                சற்று நிறுத்தினார் நாராயணன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.
                   மறுபடியும் தொடர்ந்தார்.
                   அவன் மனசால ரொம்ப பாதிச்சிட்டான். காதலிக்கறது தப்பாப்பா.. எல்லாத்தையும் விட அன்பு முக்கியம் இல்லியாப்பான்னு.. கேட்டுக்கிட்டு புலம்பிக்கிட்டேயிருந்தான்..
                   எவ்வளவோ சொல்லியும் மனசாறல..
                   மறுபடியும் பேச்ச நிறுத்தி அழுதார் வாய்விட்டு.
                   தாமரை நாராயணன் அருகே ஓடிவந்தாள்.. அங்கிள் அழாதீங்க  சங்கரனுக்கு என்ன ஆச்சு?  என்றாள் பதட்டமாக.
                   மானங்கெட்ட செறுக்கி.. உள்ள போடி.. அங்கிளாம்.. உறவு கொண்டாடறா.. யோவ் உங்கதய கேட்டவரைக்கும் போதும். அழுது நடிக்காதே எழுந்திரிச்சி  போயா வெளியே.. தாமரையின் அப்பா வந்து நாராயணன் தோளைப்பிடித்துத் தள்ளினார்.. நாற்காலியில் சற்று தடுமாறினார் நாராயணன்.
                   நாராயணன் எழுந்து போவதாக இல்லை.
                   கொஞ்சம் பொறுமையா இருங்க.. நான் நடிக்கல்லே.. ஒரு தகப்பனா நின்னு பேசறேன்.. எதுக்கு நடிக்கணும்.. நான் சொல்லி முடிச்சுட்டுப் போயிடறேன்..
                   பேசினார் விட்ட இடத்திலேர்ந்து.
                   எவ்வளவு சொல்லியும் கேட்கலே.. விட்டுடுவோம்பா.. தாமரையும் நானும் உண்மையான அன்போடதான் காதலிக்கிறோம்.. அத புரிஞ்சுக்கல்ல. நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க போதும்பான்னு.. நேத்து ராத்திரி விஷத்தை குடிச்சிட்டா.. வாழ்ந்தது போதும்பான்னான்.. அதான் அவன் கடைசியா பேசின பேச்சு.. இப்போ உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கான் எம் புள்ள.. நான் சம்பந்தம் பேச இப்ப வரலே.. சமாதானம் பேச வந்திருக்கேன்.. தயவு செஞ்சு ஒருமுறை தாமரையை ஆஸ்பிட்டலுக்கு அனுப்புங்க.. அவ வந்தா என் புள்ள பொழச்சுக்குவான்.. எனக்கு என்னோடபுள்ள உயிரோட வேணும்.. அவ பொழச்சுக்கிட்டா போதும்.. எங்காச்சும் போயிடறோம்.. ஆம்பளயா நின்னு மடிப்பிச்சை கேக்கறேன்.. என்னோட புள்ளய எனக்குக் காப்பாத்திக்கொடுங்க சார்..
                  வாய்விட்டுக் கதறியழுதார் நாராயணன்.
                    அய்யய்யோ சங்கரா.. என்றபடி தாமரை மயங்கி விழுதாள்.
                   அவளின் அம்மா உள்ளே ஓடினாள் தண்ணீர் கொண்டுவர.
                   தாமரையின் அப்பா எழுந்தார் கோபமாக.. அட கொலைகார உன் புள்ள சாகக் கிடக்கறான்னு எம்பொண்ண காவு கொடுக்க வந்தியா? போடா நாயே.. வெளியே.. மகன் வாங்கினது பத்தாதுன்னு நீ வேறயா.. என்றபடி செருப்பை எடுத்து நாராயணனை அடிக்கப்போனார்.. ஒரு அடியும் விழுந்தது.. அதற்குள் தாமரையின் அம்மா ஓடிவந்து.. விடுங்க.. என்ன இது?  அவரு வயசுல பெரியவரு.. விடுங்க..  என்று தடுத்தாள்.
                   நாராயணன் கெஞ்சினார்.. எப்படியாச்சும் என் மகன காப்பாத்திக் கொடுங்கம்மா போதும்.. எனக்கு சாதி, மதம் முக்கியமில்லே.. என் புள்ள முக்கியம்.. உங்க சாதின்னு எங்கள சொல்லிக்கங்க.. ஆனா எம்புள்ளய காப்பாத்துங்க.. என்று சொல்லி அழுதார் நாராயணன்.
                    தாமரை மயக்கம் தெளிந்திருந்தாள்.
                   தாமரை.. உன்னோட கால்ல வேணா விழறேம்மா.. நீ எம்புள்ளய கல்யாணம் பண்ணிக்கவேண்டாம்.. எப்படியாச்சும் காப்பாத்திக்கொடும்மா.. என்னோட  உயிரே அவன்தான்.. அவனுக்காத்தான் இந்த உயிர வச்சிருக்கேன்.. பெத்த பிள்ளையைவிட இந்த உலகத்துலே எனக்கு எதுவும் வேண்டாம்மா.. பெத்த புள்ள நல்லாயிருந்து பார்க்கறதவிட ஒரு தகப்பனுக்கு வேற என்னம்மா வேணும்?  பெத்தபுள்ள மனசு பார்த்து நடக்கறவன்தானே தகப்பன்.. அவனுக்காக என்ன வேணாலும் செய்யறேம்மா.. சொல்லிவிட்டு அழுதார்.
                   சற்று நேரத்தில் வீடே அமைதியானது. நாராயணன் எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார்.
                   மருத்துவமனையின்  அவசரப்பிரிவில் சங்கரனைக் கிடத்தியிருந்தார்கள்.
                   டாக்டரை தேடி ஓடினார்.
                   எங்க போயிருந்தீங்க நாராயணன் என்று டாக்டர் கேட்டார்.
                   என் புள்ளய காப்பாத்த போனேன் சார்.. என்ற நாராயணனை விசித்திரமாகப் பார்த்தார் டாக்டர்.
                   என்ன சொல்றீங்க நாராயணன்?
                   நாராயணன் சுருக்கமாக காதலால் அவன் விஷம் குடித்த கதையைச் சொல்லி முடித்தார்.
                   பிட்டி கேஸ் என்று டாக்டர் முணுமுணுத்துக்கொண்டார்.
                   டாக்டர் எம்புள்ள பொழச்சுக்குவானா?
                   சொல்லமுடியாது நாராயணன்.. லிக்கர்ல விஷத்தைக் கலந்து குடிச்சிருக்கான். அது ரொம்பக் கஷ்டம். ஆனா லிக்கர் அளவு கொஞ்சமா இருக்கு.. முயற்சிப் பண்ணிக்கிட்டிருக்கோம்.. எப்படியும் ஐந்து மணிநேரம் கழிச்சுத்தான் எதையும் சொல்லமுடியும்.. வி டிரை அவர் லெவல் பெஸ்ட்.. மனதை தேத்திக்கங்க..
                   அப்படியே நொடிந்துபோய் தரையில் சரிந்தார்.
                   என்ன இது நாராயணன்?
                   டாக்டர் வார்டு பாயைக் கூப்பிட இருவர் ஓடிவந்து நாராயணனைக் கைத்தாங்கலாக அழைத்துப்போய் அருகேயிருந்த பெஞ்சில் அமர வைத்தார்கள்.
                   ஐயா.. ஏதுனாச்சு காப்பி கீப்பி சாப்புடுறீங்களா? வாங்கியாரட்டா? என்றான் வார்டு பாய். வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தார் நாராயணன். அவருக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் உடன் தேவை ஒரு காபி போதும். என்றாலும் சங்கரனை நினைத்து மறுத்துவிட்டார்.
                   தண்ணீர் வாங்கி குடித்தார்.
                   அங்கே தாமரை வீட்டில் தாமரை மயக்கம் தெளிந்து அவள் அப்பாவின் அருகே வந்தாள்.
                   அப்பா.. நான் சங்கரனைப் பார்க்கப் போணும்..
                   செருப்பு பிஞ்சிடும்.. போய் உக்காரு.. மானங்கெட்டவளே..
                   என்ன மானம் கெட்டுப்போச்சு என்னால? என்றாள்.
                   என்ன கெடணும் இனியும்?
                   அங்கிள் என்ன கண்ணியமா வந்து கேட்டுட்டுப்போறாரு.. ஏன் உங்களால அப்படி நடந்துக்க முடியல்லே.. காதல் என்ன தேசக்குற்றமா?
                   உன்ன படிக்க அனுப்புனதே தப்பு.. அதான் திமிறு பேச்சு பேசறே. காதல் மண்ணாங்கட்டின்னு..
                   அதுல என்னப்பா தப்பு.. உண்மையான வாழ்க்கை உண்மையான அன்புலே தானே இருக்கு.. அத சங்கரன் கிட்ட பார்த்தேன். அவனை விரும்பினேன்..
                   அவ என்ன சாதி தெரியுமா?
                   இருக்கட்டுமே…
                   இருக்கட்டுமா. எனக்கு மட்டும் வாய்ப்பும் வசதியுமிருந்தா.. இந்நேரம் அந்தப்பய உடம்பு எங்காச்சும் ரயில் டிராக்குல இல்லாட்டி புதர்ல கெடக்கும்.. பண்ணிடுவேன் தெரியுமா..
                   அப்படி ஒரு சாதிவெறி இல்லப்பா…
                   அதுல என்னடி தப்பு? காலங்காலமா இருந்துகிட்டு வர்றது. நாலு சாதி சனம் இல்லாம வாழமுடியாது..
                   சரி.. ஆக்சிடெண்ட் ஆகி ஆறுமாசம் கெடந்தீங்களே.. எத்தனை கடன்னு.. எத்தனை கடங்காரன் செருப்பால அடிக்காத குறையா பேசிட்டுப்போனான்.. அப்ப உதவறதுக்கு ஒரு சாதி சனம் வரலியே..  அன்பு காட்டத் தெரியாம.. ஆபத்துலே உதவாம.. நாலு வார்த்தை ஆறுதல் பேசத் தெரியாம அந்த சாதிசனம் தேவையா?
                   வியாக்கியானம் பேசாதே.. நீ போகக்கூடாது.. உள்ள போடி.. அப்படி மீறிப்போன.. பெத்த பொண்ணுன்னுகூட பாக்கமாட்டேன்.. வெட்டிப்போட்டுட்டு ‘ஜெயிலுக்குப் போயிடுவேன்.. இது என்னால முடியும்.
                   உள்ள போடி.. என்றாள் தாமரையின் அம்மா.
                    போக மாட்டேம்மா.. வெளியத்தான் போகப்போறேன். சங்கரன பார்க்கத்தான் போறேன்.  எனக்கும் அவனுக்கும் கல்யாணம் நடக்குதோ இல்லியோ என்னாலத்தான் அவன் இப்ப சாகக்கிடக்கான்.. அவன் உயிரக் காப்பாத்துங்கன்னு பெத்தவரு மடிப்பிச்சை கேட்டுட்டுப்போயிருக்காரு.. அதுக்காகப் போவப்போறேன்.. உங்களால என்ன முடியுமோ செஞ்சுக்கங்க.. என்றபடி கதவைத் திறந்துகொண்டு வெளியே போக முயன்ற தாமரையின் தலைமுடியைக் கொத்தாக் பிடித்து உள்ளே இழுத்தார்.. கேடு கெட்ட நாயி.. அலையுது பாரு.. அவர் இழுத்த வேகத்தில் உள்ளே விழுந்தவள் அதே வேகத்தில் எழுந்தாள்.. இனிமே என் மேல கைய வச்சிங்க நடக்கறது வேறு என்று துர்க்கைப் போல நின்றாள் தாமரை.. மிரண்டு ஒதுங்கினர்.. திறந்த கதவைத் தள்ளி வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வேகமாக போங்க என்றாள்.. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
                   எங் குடும்ப மானமே போச்சு.. இன்னிக்கு அவளாச்சு நானாச்சு பாத்துட்டு வந்துடறேன்.. என்றபடி சட்டையை மாட்டிக்கொண்டு தாமரையின் அப்பா வெளியே வந்து வண்டியை வேகமாக உதைத்துக்கொண்டு கிளம்பினார்..
                   மருத்துவமனையின் வாசலில் தாமரை  போய் இறங்கி வேகமாக உள்ளே ஓடினாள்.
                   அதற்குள் எல்லாமும் முடிந்துபோயிருந்தது.
                   சங்கரன் இறந்துபோயிருந்தான்.
                   நாராயணன் தாமரையைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு அழுதார். எம்புள்ள போயிட்டான் தாமரை.. அதற்குமேல் பேசமுடியாமல் கதறிக்கதறி அழுதார்.
                   சங்கரா… என்று கத்தியபடி தாமரை மயங்கி விழுந்தாள்.
                  மயக்கம் தெளிவித்தார்கள். அதற்குள் தாமரையின் அப்பா உள்ளே வந்தார்.
                   குடிகெடுத்தவளே.. எம் மானமே போவுது.. வாடி என்றபடி தாமரையின் கையைப்பிடித்து இழுக்க. தாமரை அப்படியே அசையாமல் நின்றார்.
                   நாராயணன் மருத்துவமனையின் நடைமுறைகளைச் சரிசெய்துகொண்டிருந்தார்.
                   சங்கரன் உடலை ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.
                   நாராயணன் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறப்போனார்.
                   அப்பா..நில்லுங்க என்று குரல் கேட்கத் திரும்பினார். தாமரை.
                   நானும் வரேன்.
                   எங்கடி  போற?

                   இனி நீங்க யாரும் எனக்கு வேண்டாம்.. சங்கரன் போயிட்டான். ஒரு நல்ல தகப்பனோட நல்ல பிள்ளையா இருந்து போயிட்டான். அவன மாதிரி எனக்கு ஒரு நல்ல தகப்பன் கிடைக்கல்லே.. சாதிதான் முக்கியம்னு வாழற சாக்கடைக்கூட்டத்தோட நிக்கற ஒரு ஆளு நீங்க.. உங்களுக்கு அன்பு, பாசம் எல்லாம் புரியாது.. மகனை இழந்துட்டாரு. தெரிஞ்சோ தெரியாமலோ நான் காரணம் ஆயிட்டேன்.. எனக்கு நல்ல கணவனா சங்கரன் இருப்பான்னு நம்பினேன்.. ஆனா அதுக்குக் கொடுத்து வைக்கலே.. ஆனா எனக்கு  நல்ல தகப்பன் கெடச்சிருக்காரு.. அத யாரும் தடுக்கமுடியாது.. நான் அவருக்கு நல்ல மகளா இருப்பேன்.. இனி அவர்தான் எனக்கு அப்பா எல்லா உறவும் .. நான் அவருக்கு துணையா இருப்பேன்.. வாங்க அப்பா என்றபடி தாமரை நாராயணன் கையை இறுகப் பற்றி அவருடன் ஆம்புலன்சில் ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்டுவிட்டது புதிய காற்றில் புதிய உறவுடன்.
Read more...

Thursday, 2 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 29

Rate this posting:
{[['']]}
தந்தை 

"எதிரிக்கு எதிரி நண்பன்டா... "

"இருந்துட்டு போங்க"

அப்பாவும் மகனும் இப்படியா பேசிக்கொள்வது என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தபடி நான்.

முதலில் பேசியது என் தாத்தா. நானும் என் தாத்தாவும் நண்பர்கள் என்ற தொனியில் எக்காளமிட்டபடி...

என் மகன் எனக்கு எதிரி இல்லை என்பது போல் உதட்டில் புன்முறுவலை தாங்கியபடி இரண்டாவதாக பேசியது என் தந்தை.

எதிரும் புதிருமான, இரு துருவங்களிக்கிடையே தத்தளித்தபடி நான்...

அப்பாவின் அப்பா, என் தாத்தா, முன்னோர்கள் சொல்லியது தான் வேதவாக்கு என்று நிற்பவர். முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று பழங்கால கதைகளில் ஊறி திளைப்பவர். மழை எதனால் வருகிறது என்றால் வருண பகவானால் வருகிறது என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர். அவரது நம்பிக்கையே அவரின் இருப்புக்கு ஆதாரமாகியதால், அஸ்திவாரத்தை ஆட்டினால் ஆடிப் போய் கோபத்தின் உச்சியில் சென்று அமர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்.

அப்பாவோ எதையும் ஆய்வு செய்யாமல் அதை நம்ப மாட்டார். அனைத்தையும் படிப்பார். படித்ததை மறு ஆய்வு செய்து, புரிதலை மேம்படுத்தி கொள்வார். அதற்கு ஒரு வகையில் உதவி புரிவது அவரது அப்பாவுடன் அவர் நடத்தும் வாதங்கள்.

"பேராண்டி, மழை எங்கிருந்துடா வருது?"

"அது வந்து தாத்தா, தண்ணி எல்லாம் ஆவியாகி மேலே போய் குளிர்ந்து திரும்பவும் தண்ணியாகி கீழே வருது" என்றேன் நான்.

"நம்ம ஊரு ஏரிக்கரை தண்ணி தினமும் தான் ஆவியாகுது, ஏன் தினம் பெய்ய மாட்டேங்குது?"

"அது தெரியலியே தாத்தா?"

"அப்படி வாடா பேராண்டி வழிக்கு... இப்ப தெரியுதா வருண பகவான் மகிமை"

இரு தாத்தா அப்பா கிட்ட கேட்டுட்டு வரேன். 

தாத்தா சொன்னதை கேட்டதும் அப்பா சிரித்தார்.

"அது தினமும் தாண்டா பெய்யுது, ஆனா இங்க பெய்யல, அடிக்கிற காத்துல வேற எங்கேயோ பெய்யுது"

"அப்ப தினமும் மழை பெய்யுதாப்பா?"

"மழை தினமும் தாண்டா பெய்யுது. நிலத்துல பெய்யும் மழைய விட கடல்ல பெய்யும் மழை அளவு அதிகம்டா. அது நமக்கு தெரியறதில்ல. அதனால தாத்தா அப்படி சொல்றார்."

தாத்தாவிடம் சென்று தந்தை சொன்னதை சொன்னதும் சிறிது எரிச்சலடைந்தார் தாத்தா. 

"சரிடா பேராண்டி நீ சொல்றதே கரெக்டுன்னு வச்சுக்குவோம். இந்த மழை தண்ணி எல்லாம் காத்துல எப்படி மிதந்துகிட்டு இருக்குது. சில நேரங்களில் ஐஸ் கட்டி மழை கூட பெய்யுது. புவி ஈர்ப்பு விசை அப்படி இப்படின்னு அளப்பீங்களே, இந்த ஐஸ் கட்டிகள் எல்லாம் எப்படி அந்தரத்துல நிக்குது."

அதானே என்று ஆச்சரியப்பட்டேன் நான்.

தாத்தாவுக்கு ஒரே குஷி. மீண்டும் வருண பகவான் கதையை எடுத்து விட்டார்.

நேராக தந்தையிடம் வந்தேன். நடந்ததை சொன்னதும் மீண்டும் புன்னகைத்தார். தன்னுடைய லேப்டாப்பில் கூகிள் பக்கத்தை வரவழைத்தார். எப்படி மழை அந்தரத்தில் நிற்கிறது என்று விளக்கி சொன்னார். 

"ஏம்பா, தாத்தா புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்."

"ஒவ்வொருவர் சுயமும் எதோ ஒரு அடையாளத்தில் தொங்கியபடி இருக்குது டா. அந்த அடையாளம் தொலைஞ்சுடுச்சுன்னா வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு சிலர் நம்புறாங்க. அதனால அந்த அடையாளத்தை கெட்டியா புடிச்சுகிட்டு அதை விட முடியாம அவஸ்தை படுறாங்க. இது எல்லோருக்கும் பொருந்தும்."

"நீ சொல்றது எனக்கு புரியல பா"

"உனக்கு ஒரு காலம் வரும் அப்ப புரிஞ்சுக்குவ."

"சரி தாத்தாவை மடக்க ஏதாவது ஒரு கேள்வியை சொல்லேன். நான் போய் அவரை நோன்டுறேன்."

"பாவம்டா அவரு"

"பரவாயில்ல, நீ சொல்லு பா."

"நீ முடிவு எடுத்திட்ட, சரி சொல்றேன் கேட்டுக்க."

"நெருப்பு இல்லேன்னா சூரியன் இல்ல, அப்ப சூரிய பகவான் வேற அக்னி பகவான் வேற அப்படின்னு ஒன்னு கிடையாது. அப்புறம் ரெண்டு பேரையும் தனி தனியா கும்புடுறீங்க? சூரிய பகவான் பெரியவரா அல்லது அக்னி பகவான் பெரியவரா?"

இதை கேட்டால் நானும் அவருக்கு எதிரி ஆகி விடுவேனா என்று யோசித்தபடி அப்பாவின் அப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் நான்.

Read more...

தந்தை போட்டிச் சிறுகதை - 28

Rate this posting:
{[['']]}
அப்பா எப்ப வருவீங்க???

அம்மா அப்பா எப்ப வருவாங்க”? சேலையின் தலைப்பைப் பிடித்து இழுத்தபடிக் கேட்க ஆரம்பித்தாள் ஜனனி,,, சமைத்துக் கொண்டிருந்தவள், ஜனனியை வாரி அணைத்துக் கொண்டாள்... “வருவாங்க செல்லம்” என்று சொல்லிவிட்டு அடுப்பை நிறுத்திவிட்டு ஜனனியைத் தூக்கிக்கொண்டு சோபாவிற்கு வந்தாள் கார்த்திகாயினி.. அருகில் அமரவைத்துக்கொண்டு கிச்சு கிச்சு மூட்டி விளையாடினாள்...

“அம்மா பப்பு கடைஞ்சி விளையாடலாமா”? “ம்ம் விளையாடலாமே” என அவளோடு விளையாட ஆரம்பித்தாள்... ஜனனி தூக்ககலக்கத்தில் எழுந்து கொண்டாலும் சரி, தூங்கும் முன்பும் சரி, அப்பாவைப் பற்றி கேட்பதைத் தடை செய்ய முடியவில்லை.. அதுவும் இந்த வாரக் கடைசியில் அப்பா வந்துவிடுவார் என்று சொன்னதிலிருந்து எப்போதும் இதே கேள்விதான்....அவள் பிஞ்சு மனதில் அப்பாவுக்கான ஏக்கம் இருப்பதை கார்த்திகா உணராமல் இல்லை... ஆனாலும் என்ன செய்வது இன்றோடு நான்கைந்து நாளுக்aகு மேல் ஆகிவிட்டது அவர் பேசியே... ஒவ்வொரு நாளும் யுகமாய் கழித்த போதும் மனம் ரணமாய்த்தான் இருந்தது... ஜனனி மட்டும் இல்லையேல் இந்த நாட்கள் வெகு கொடுமையாக இருந்திருக்கும் என்பது நிச்சயம்.... தனது கைப்பேசியில் இணையத்தில் தன் கணவனைத் தேடிப்பார்த்தாள்... அவரின் பெயருக்கு பக்கத்தில் பச்சை விளக்கு எரியவே இல்லை. இவள் அனுப்பிய எந்தக் குறுஞ்செய்தியும் வாசித்தது போலவும் தெரியவில்லை... வசிகீரன் பெயரில் மட்டுமல்ல, தோற்றத்திலும் வசீகரனே... ஆறடி உயரம் ஆஜானுபாகுவான தோற்றம், திரண்ட தோள்கள் என முதன் முதலில் கார்த்திகாவை கவர்ந்த ஆண் மகன்.... அதுவும் கார்த்திகாவை பெண் பார்க்க வந்திருந்த வங்கி அதிகாரியின் தோழனாய் வந்து கார்த்திகாவை மணந்து கொண்டவன்... இவனைத்தான் கட்டிக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்துக் கட்டிக்கொண்டவள்... அன்றைக்கு அவன் மீது இருந்த காதல் தான் அவன் இராணுவவீரன் என்று தெரிந்தும் நேசிக்கத் தூண்டியது.... இன்று வரை தன் நேசம் கொஞ்சமும் குறையாமல் தான் இருக்கிறாள்... வசீகரனும் கார்த்திகா என்றாலே கசிந்து உருகிவிடுவான்... கம்பீரத்துக்குள் இருக்கும் காதல் சில நேரங்களில் வியப்பாய்த்தான் இருக்கும் கார்த்திகாவுக்கும்... 

எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும் வசீகரனின் வேலை அதற்கு இடம் கொடுத்ததில்லை ஆனால் சிறிது இடைவெளி என்றாலும் கூப்பிட்டு பத்து முத்தங்களையாவது பரிசளித்துவிடுவான் இணையம் வாயிலாக... எல்லை பாதுகாப்பு என்பதால் யுத்த நாட்களில் இவளுக்கு முள் மீது இருப்பதாய்த்தான் தவிப்பாள்... ஜனனியுடன் அதிகம் இல்லாத போதும் கூடத் தினம் ஜனனி அப்பா என்று கேட்காமல் இருக்க மாட்டாள்.... இரவில் வசீகரன் அலைக்கும் போது சில நாட்களில் ஜனனி தூங்கி விடுவதும் உண்டு.... பகலில் ஓய்வு கிடைத்தால் காணொளி மூலம் தன் கண்மணியோடு உறவாடி அகம் மகிழ்வான் வசீகரன்... எப்போதுமே வசீகரனுக்காய் காத்திருப்பதுதான் இவளின் வாடிக்கை... காத்திருக்கும் நேரங்கள் நாட்களாய் நீண்டுவிட்டதாள் தாங்க முடியா பாரமாய் உணர்ந்தாள்..... ஜனனியோடு விளையாடுவது மட்டும் தான் இவளுக்கு தற்போது இருக்கும் ஓரே ஆறுதல்... சரியாய் சமைத்து சாப்பிட்டு ஐந்து நாட்களைக் கடந்து விட்டது,, பாதி சமையல்,கருகிப் போதல்... பால் பொங்குதல் என அத்தனை பிழைகளும் சரியாகவே நடந்து கொண்டிருந்தது.... அம்மாவைத் துணைக்கு அழைக்கலாம் என்று எண்ணிய போதும் “வேண்டாம் அம்மா எதையாவது பேசி இன்னும் ரணப்படுத்துவாள்... நானே இந்தப் பையன் வேண்டாம்னு சொன்னேன் கேட்காம நீதானே கட்டிக்கிட்டு இப்ப அனுபவினு” சொல்லித் திட்டி திட்டி இன்னும் காயப்படுத்துவாள்..

கடவுளின் படத்துக்கு முன்பு சென்று அமர்ந்தாள் கண் மூடி வேண்ட ஆரம்பித்தாள் இறைவா இன்றைக்காவது அவர் ஒரு வார்த்தை பேசி விட வேண்டும்.. எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்று கண்ணீர் மல்க வேண்டியவள்.... கைப்பேசியில் ஒலித்த பீப் சத்தம் கேட்டதும் ஓடி வந்து பார்த்தாள்.. வசீகரன் தான் “ஹாய் டியர்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்... “ஹாய் டா, ஏன் இப்பிடி பண்ற, எனக்கு உசுரு போவுது ஒரு வார்த்தை ஒரே ஒரு செய்தி அனுப்பியிருக்க கூடாது?, நான் எப்படி துடிச்சேன் தெரியுமா? என தன் மனதைப் படம் பிடித்துக் காட்டினாள்... “அய்யோ லூசு இங்க இணையம் கிடைக்கலை... அதான் தொடர்பு கொள்ள முடியலை எப்படி இருக்க,, ஜனனி என்ன செய்யுறா”? “ ம்ம்ம் நலம் அவளும் உன்னை கேட்டுக்கிட்டே இருக்கா” பதில் அனுப்பி விட்டுக் காத்திருந்தாள்... மறுபடியும் இணையம் தொடர்பற்றுப்போக வெறுப்பாயிருந்தது.. மீண்டும் எப்போது தொடர்பு கொள்வார் எனக் காத்திருக்க வேண்டும்... ஆனாலும் ஆறுதலே இரண்டு வார்த்தையேனும் அவனின் இருப்பை அவளுக்கு உறுதிப் படுத்தியது.... துடித்துக் கொண்டிருந்த மனது கொஞ்சம் இலகுவாய் இருந்தது... சுவற்றில் சாய்ந்து பெருமூச்சொன்றை உதிர்த்தவள் வசீகரனைக் கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்திக் காதலை உயிர்ப்பித்து கவிதை வடிக்கத் தொடங்கினாள் ‘ எப்போது நீ வருவாய் என வினவும் மகளிடம் சொல்லி விடுகிறேன் நீ வந்து விடுவாய் என்று எப்படி வருவாயோ என ஏங்கும் என் இதயத்தை என்ன சொல்லி நான் சமாதானப்படுத்துவது” என இதயத்தில் எழுதிய கவிதையை அங்கேயே சேர்த்து வைத்துவிட்டு ஜனனியைத் தூக்கிக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் உளவ ஆரம்பித்தாள்... 

அப்போதுதான் பக்கத்து வீட்டுப் பங்கஜம் பேசுவது காதில் விழுந்தது... கார்த்திகா என இவள் பெயர் அடிபடவும் இவளும் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாள்... “உனக்கு தெரியாதுடி, முந்தா நாள் இரவு, நான் தூக்கத்தில் விழுச்சு பாக்குறேன், கார்த்திகா வீட்டில் இருந்து ஒருத்தன் முக்காடு போட்டுக்கிட்டு வெளியே போறத பாத்தேன்... என்ற அவளின் வார்த்தைகள் நெஞ்சை முள்ளாய் தைத்தது.... காபி பொடி கடன் கேட்டு வந்த போது இல்லை என்பதை இல்லை என்று சொன்னதன் விழைவு இந்தப் பேச்சு.. கோபமும் ஆத்திரமும் தலைதூக்கியபோதும் அவளிடம் சண்டைபிடிக்க தோன்றவில்லை.. அந்த நேரம் வந்த கார்த்திகாவின் தங்கை ஆர்த்தி காதிலும் அவ்வார்த்தை விழ ஆத்திரத்தில் கொதிக்களானால்... “என்ன அக்கா அந்த பொம்பளை இத்தனை மோசமா பேசுறா நீயும் கண்டுக்காம இங்க நின்னு கேட்டுக்கிட்டு இருக்க”.. நீ இரு நான் போயி கேட்டுட்டு வாரேன்... “ச்சே விடுடீ நீ போயி கேட்டா இன்னும் வஞ்சம் தீர்க்க மோசமா இதைவிடக் கேவலமா ஊர் முழுக்க சொல்லீட்டுத்திரிவா”... விடு எல்லாம் விதி... ஆண் துணை இல்லமா வீட்டில் இருக்கிற பொம்பளைங்க அத்தனை பேரும் அவுசாரியாத்தான் இந்த சமூகம் நினைக்கிது, நம்மை நீருபிக்க நாம அவுங்க கிட்ட போயி தரம் தாழ்ந்து பேசனும்னு அவசியமில்லை, நீ வா” என அவளை இழுத்து வீட்டுக்குள் போனாள்... “அக்கா அத்தான் எப்ப ஊருக்கு வாராங்க”? “இந்த வாரக் கடைசியில் வருவாங்க டீ”.., “சரி அவர் தொலைப்பேசிக்கு இணைப்பு கொடு, நான் பேசுறேன்”... “இல்லடி அங்க இணையம் வேலைச் செய்யலை போல அதனால் இப்போதைக்குப் பேச முடியாது... நீ இங்கையே இருடி இந்த வாரக் கடைசியில் அத்தான் வருவார் வந்த பின்ன கிளம்பிப் போ சரியா”? “ம்ம் வாரவரைக்கும் துணைக்கு நாங்க, வந்த பின்ன துரத்திவிட்டு ரெண்டு பேரும் டூயட் பாடனும் அப்படித்தானே”? “ச்சீ போடி நீ இரு நான் காபி போட்டுக் கொண்டு வாரேன்,” என உள்ளே போகும் அக்காவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் ஆர்த்தி... எத்தனை வலி இருந்த போதும் அன்பை அடித்தளமாக்கி வாழும் இவர்களின் வாழ்க்கை எப்போதும் மனநிறைவோடு இருக்க வேண்டுமென வேண்டினாள் இறைவனிடம்... 

வசீகரனுக்குப் போராட்டமாகவே இருந்தது,,, இணையம் வேலை செய்யாதது கார்த்திகாவை விடப் பலமடங்கு வலித்தது வசீகரனுக்கு... “என்ன வசி மனைவிகூடவா சாட்டிங்”? “ஆமாம் திவா இணையம் கிடைக்கலை.. நிறையவும் கவலையா இருக்கா... எனக்கும் நிறையவே தவிப்பா இருக்கு... என்ன செய்யறதுன்னு புரியலை”.. “நோ... நோ... வசி டோண்ட் ஃபீல், வா அதிகாரிகிட்ட கேட்டுட்டு அங்க இருக்கிற போன் மூலமா வீட்டுக்குப் பேசு மனசு ரிலாக்ஸ் ஆகும்”....என்று நண்பனைத் தேற்றி கூட்டிப் போனான் திவாகர்... அதிகாரி ஒன்றும் போனதும் பேசிக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கப்போவதில்லை இருப்பினும் கேட்டுத்தான் பார்ப்போமே என்ற எண்ணமே அதிகாரியின் அறை நோக்கிப் போகவைத்தது.... “சார்” என்றதும் நிமிர்ந்து பார்த்தவர்,, “என்ன”? என்றார்... “வீட்டுக்குப் போன் பண்ணனும் சார்” ... “உங்க டூயிட்டி டைம்”? “சார் எனக்கு டூயிட்டிக்கு இன்னும் டைம் இருக்கு, ஒரு பத்து நிமிசம் பேசீட்டு கிளம்பிடுறேன்” என்று கேட்டதும் “ம்ம்” என்று சொன்னவர் அங்கேயே அமர்ந்திருந்தார்... வசீகரனுக்குக் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது திவாகர் வெளியில் நின்றிருந்தான்... திவாகர் மட்டுமல்ல அதிகாரியும் தமிழ் தெரிந்தவர் இருவரையும் அருகில் வைத்துக்கொண்டு பேசுவது கொஞ்சம் தயக்கமாக இருந்தது... ஆனாலும் வீட்டு எண்ணுக்குச் சுழற்றினான்... மறுமுனை ரிங் போய்கொண்டிருந்தது எடுத்ததும் “ஹலோ நான் வசி பேசுறேன்” என்றதும்... “இருங்க அத்தான், அக்காவை கூப்பிடுறேன்” என்றவள் “அக்கா, அக்கா, அத்தான் லைன்ல!! சீக்கிரம் வாங்க” என்று விட்டு “அத்தான் எப்படி இருக்கீங்க? இன்றைக்கு உங்க கிட்ட பேசனும் என்று நினைத்திருந்தேன் சரியாக நீங்களும் கால் எடுத்துட்டீங்க” என்று பேசிக்கொண்டே போனவளை இடைநிறுத்திவிட்டு “கார்த்திகாவிடம் கொடு” என்றான்... வேகமாய் வந்த கார்த்திகா ரிசீவரை பிடுங்கி “ஹலோ நான் கார்த்திகா” என்றாள்... “நான் இந்த வாரக் கடைசியில் வந்துடுவேன்... இங்க நான் நல்லா இருக்கேன் நீயும் ஜனனியும் எப்படி இருக்கீங்க எதாச்சும் பிரச்சனையா”? “இல்லைங்க ஒன்றும் இல்லை, ஜனனி சுகமா இருக்கா, உங்களையேதான் கேட்டுக்கிட்டு இருக்கா,ஒரு இரண்டு வார்த்தை அவகிட்ட பேசுங்க” என்று போனை ஜனனியின் காதில் வைத்தவள்,, “குட்டி அப்பா பேசுறாங்க பேசுடா”...என்றாள் “அப்பா எப்ப வருவீங்கப்பா”? “வந்துடுவேன் செல்லம்,, என்று முத்தமழை பொழிந்தான்” “சரி அம்மா கிட்ட குடுங்க” என்றதும் ஜனனி ரிசீவரை தாயிடம் கொடுக்க “இங்க இணையம் பிரச்சனையா இருக்கு நான் தொடர்பு கொள்ளலேனு நீ வருத்தப்படாதே வந்த பின்ன நேரில் பேசிக்கலாம் உடம்ப பார்த்துக்க, ஜனனியைப் பத்திரமா பார்த்துக்க நான் வைக்கிறேன் பை ,, ரீசிவரை வைத்தவன் நிம்மதி பெருமூச்சொன்று விட்டான்... 

அவன் விட்ட கடைசி மூச்சும் அதுவே... எதிரி நாட்டின் தீவிரவாத கும்பல் வீசிய குண்டு வெடித்துச் சிதறிப்போன உயிர்களில் அவனும் ஒருவனாய்... இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த படி கிடந்தான்.... கண்ணில் கார்த்திகாவின் முகம் உறைந்து நின்றது... காதில் ஜனனியின் “அப்பா எப்ப வருவீங்க?” என்ற மழலைக்குரல் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது....

Read more...

Wednesday, 1 June 2016

தந்தை போட்டிச் சிறுகதை - 27

Rate this posting:
{[['']]}
என்னோற்றான் கொல்எனும் சொல்

மணியக்காரர் வீடு முன்னாடி உட்காந்திருந்த கூட்டம் செல்போனில் பேசிகிட்டுயிருந்த சரவணனை பார்த்தபடி இருந்தார்கள் .

பேசி முடிந்த சரவணன் “இன்னும் ிக்கெட் கிடைக்கலயாம் ,
கிடைச்சவுடனே கிளம்பி வரேன்னு ொல்றான்

அவன் வரவரைக்கும் உசுரு இருக்கனுமே” புகையிலைய துப்பியபடி
 போஸ்ட் மாஸ்டர் சொன்னார்.

“ காசு பின்னாடியே ஓடிகிட்டுயிருந்த மட்டும் போதுமாஎவ்வளவு 
இருந்து என்ன பிரோஜனம்,வெள்ளகாரனுக்கு வைத்தியம் பார்க்க 
போய்இப்ப கடைசி நேரத்தில பெத்தவன் கூடயிருக்க முடியலையே” 
கூட்டத்திலிருந்த ஒருவர் ஆரம்பித்தார் .

"சும்மா சொல்லனும்னு சொல்லதிங்க , காசு இருந்ததால் தானே 
ஆஸ்பத்திரில் வச்சி நல்ல பார்த்திக்க முடிஞ்சிதுநல்லாயிருந்த 
மனுஷனுக்கு திடீர்னு இப்படியாகும்னு தெரியுமா?? ”

மணியக்காரர் போன மாசம் வரைக்கும் நல்லதான் இருந்தார்ஒரு நாள் 
காலையில் பாத்ரூமில் வழுக்கி வி ஆஸ்பத்திரிக்கு போய் 
சேர்ந்தங்க .

போஸ்ட் மாஸ்டர் அப்பவே சொன்னார் “ பாசத்தை ஏன்டா கக்குஸில் 
காட்றிங்க , வயசான காலத்தில் நடந்தவே கால் வழுக்கும்இதில 
டைல்ஸ் ரொம்ப முக்கியமா , அப்பன் பக்கதில உக்காந்து பாசமா பேசமா ,
பாத்ரூமை பளபளனும் காட்டிட போதுமா??”

ஆஸ்பத்திரியில் காலில் முறிவுனு கட்டு போட்டு அனுப்பிட்டாங்க
அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் மணியக்காரர் மகன் சண்முகம் ,லீவ் 
இல்லாதால் வர முடியாம போக, ரிப்போட்டை மெயிலில் 
அனுப்ப சொல்லி பார்த்தார் ,அவருக்கு ஏதோ பொறிதட்ட ,தலைய 
ஸ்கென் செஞ்சி பார்க்க சொன்னார்முளையில் ரத்தம் கட்டினது 
அப்பதான் தெரிந்தது.

சண்முகம் தனக்கு தெரிந்த பெரிய டாக்டரின் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்தான் . ஆனால் வயதானதால் ஆப்ரேஷனுக்கு உடம்பு 
தாங்காதுமாத்திரைகள் தான் மூலம் சரி பண்ணனும் என்று சொல்லி பத்து
நாள் பார்த்திட்டு எந்த முன்னேற்றம் இல்லைனு ,எப்ப வேணாலும் 
முடிஞ்சிரும்னு வீட்டிற்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க .

ஆஸ்பத்திரியிருந்து கூட்டிகிட்டு வந்து ரெண்டு நாளா முச்சு 
இழுத்துகிட்டு இருக்கு , மகனை ார்க்கிற ஆசை தான் இழுத்து பிடிச்சுகிட்டு 
இருக்கிறதா ஊருள்ள பேசிகிட்டாங்க.

இருக்காத பின்னே , ஒத்த மகனை ைராக்கியாமாக படிக்க வச்சி ,
 விருப்பட்ட மாதிரி டாக்டர் ஆக்கினார்அவன் நல்லாயிருக்கிறதா   கடைசிய கண் குளிர பார்த்திட்டு போக ஆசைபடுறார்

ஆமாமஅதுக்கு அந்த பையனை கொஞ் நஞ்சமா பாடு படுத்தினார்

அது இப்ப ரொம்ப முக்கியமா ??” என்றபடி கூட்டத்தை அடக்கினார் 
சிவசு வாத்தியார் .

“ உன் கூட்டாளிய சொன்ன பொறுக்கதே

மணியக்காரரும்சிவசு வாத்தியாரும் இளவட்ட காலத்திலிருந்து 
அவங்க பிள்ளைங்க இளவட்ட காலம் ரைக்கும் ஒண்ணுகுள்ள 
ஒண்ணு .

சிவசு வாத்தியார் மகன் சரவணனும் , மணியக்காரர் மகன் 
சண்முகமும் ஒரே வகுப்பில் படிக்கவும் நட்பும் இன்னும் வழுவச்சி .

சண்முகம் பிறந்தோன அவனை பெரிய படிப்பு படிக்க வைக்கனும் அப்படினு மணியக்காரர் 
முடிவு பண்ணிட்டார்.

சிவசு வாத்தியார் கூட “ ஏண்டா ,அவன் இன்னும் புரண்டே படுக்கலை ,
அதுக்குள்ள புத்தக சுமைய ஏத்த ார்க்கிறா “ என்று சொல்லி பார்த்தார்.

உனக்கு தெரியாது சிவசு ,இப்பயிருந்தே சொல்லிகிட்டு இருந்த்தான் நல்லா மண்டையில் ஏறும்படிக்காம நான் ஒருத்தன் கஷ்டபடுறது போதும்இவன் 
நல்லா படிக்கனும்

மணியக்காரர் சொன்ன மாதிரி கஷ்டமெல்லாம் ஒன்னும் படலை , 
இருபது ஏக்கரில் விவசாயம் பண்ணும் சம்சாரி தான்என்னா 
முன்னாடி அம்பது ஏக்கர் இருந்த்து ,தேவையில்லாம 
ஒருத்தனுக்கு ஜாமீன் போட்டு மொத்த சொத்தும் போக 
பாத்துச்சி , வெளியூரில் வேலையிலிருந்த அண்ணன்,தம்பிகள் வந்து பைசல்
பேசி இருபது ஏக்கரை காப்பத்தி ிட்டாங்க.

அண்ணன் திட்டினதை பொறுத்துகிட்ட மணியாகாரருக்கு ,தம்பிங்க “யாரு ஏதை நீட்டினாலும் ,கையெழுத்து போட்டுருவியாஉனக்கு புரியலைனாபடிச்சவங்க யார் கிட்டயாவது கேட்க வேண்டியது தானேஏன் இப்படி தற்குறிய இருக்க??” கேட்டது தலைவாழை இலை போட்டு நடுவில நரகலை வச்ச மாதிரி 
இருந்திச்சி. இருந்தாலும் அப்ப அவங்க தயவு தேவையிருந்ததால் எதிர்த்து பேச முடியலை.

அன்னைக்கு தம்பிகளை விட தனக்கு பிறக்க போற பிள்ளைய மேல படிக்க 
வைக்க ,நினைச்சதோட மட்டுமில்லாம அதை பத்தின விவரங்களை சேகரிக்க ஆரம்பிச்சிட்டார் .

சண்முகம் வளர வளர அவனை எல்லாத்தையும் நேரம் போட்டு செய்ய 
வைச்சார்அந்த ஊரிலயே அப்பாவை “ டாடினு கூப்பிட்டா முதல் ஆள் 
சண்முகம் தான்.

சம்மர் கேம்புனா என்னனு தெரியாத மணியக்காரர் தான்ஒருவேளை மகனுக்கு வெளியூரில் 
படிக்க சீட் கிடைச்சா கஷ்டபட கூடாதுனு சனிக்கிழமை ஹிந்தி 
கிளாசுக்கும்ஞாயத்து கிழமை இங்கிலீஷ் கிளாசுக்கும் பக்கத்து 
டவுனுக்கு அனுப்பினார் .

தன் மகன் மட்டுமில்ல எல்லாரும் படிக்கானும் நினைச்ச மணியக்காரர் தன் தோட்டத்தில் வேலை பார்க்கும் சின்னான் மகனையும் கடைசிவரைக்கும் படிக்க வைச்சார்.

ஊரிலிருக்கும் எல்லாருக்கும் பார்த்து பார்த்து உதவி செஞ்சவர்,சண்முகம் விஷயத்தில் மட்டும் சர்வாதிகாரியாக இருந்தார்.

பம்பர விளையாட்டில் ஆக்கர் போடுறதில் சண்முகம் கில்லிஎப்பவது வீட்டிற்கு தெரியாம விளையாடுவன்அப்படி ஒருமுறை அவன் ஆக்கர் போடும் ஆர்வத்தில் தூரத்தில் வந்த மணியக்காரரை பார்க்காம விட்டுடான்மணியக்காரர் அவன் முதுகில் ஆக்கர் போட்டதுக்கு அப்புறம் அவன் ஆக்கர் போட வந்ததில்லை.

நல்ல படிக்கிறவனாக இருந்தாலும்,அவன் கவனம் சிதற கூடாதுனு பால்யத்தின் விளையாட்டுமகிழ்ச்சி ,குறும்பு போன்ற சிறகுகளை வெட்டினார்புத்திசாலியான சண்முகமும் அவன் கூண்டுகிளி என்பதை சீக்கரமாக புரிஞ்சுகிட்டான்.சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளையாக மாறிட்டான்.

சண்முகத்துக்கு அனுமதிக்கபட்ட ஒரே விளையாட்டு சதுரங்கம் மட்டுமேஅதுவும் அது முளையை யோசிக்க வைக்கும்,ஞாபக சக்திய அதிகபடுத்தும் என்று யாரோ சொன்ன யோசனையால்.

மேல் வகுப்புக்கு போக போகசண்முகத்தின் மதிப்பெண் அதிகரிக்க ஆரம்பிக்கஇருந்த கொஞ்ச சுதந்திரமும் குறைக்கபட்டது. சரவணனை தவிர வேறு நண்பர்கள் யாரும் அனுமதிக்கபடலை,அதுவும் நண்பனின் மகன் என்பதை விட மகனின் அளவிற்கு படிக்கும் மாணவன் என்ற தகுதியால் மட்டுமே .சிம்ரன் என்ற நடிகைய பத்தி சண்முகம் கேள்விபட்டது சரவணன் மூலமாக தான்.

பத்தாவது வகுப்பு தேர்வு விடுமுறையில் படையப்பா” சினிமாபக்கத்து ஊர் டீமோட கிரிக்கெட் என்று பசங்க கொண்டாடிகிட்டு இருக்கும் போது சண்முகம் பனிரெண்டாவது பாடத்தின் முதல் ரீவிஷனை முடிந்திருந்தான்.

சரவணனுக்கும் சேர்த்து மருத்துவ நுழைவு தேர்வு ஆப்ளிகேஷன் வாங்கிட்டு வந்த மணியாகாரர்சிவசு மகனின் விருப்பத்திற்கு ஏற்ப திரைபட கல்லூரியில் சேர்க்க இருப்பதாக சொன்னவுடன்
” இந்த வயசில் அவனுக்கு என்ன தெரியும்?? நாம தான் எடுத்து சொல்லனும் “ என்று கோபப்பட்டார்.

சிவசு அமைதியாக “ இந்த வயசில் பசங்க விருப்பட்ட வாழ்க்கைய அமைச்சி கொடுக்காம நம்ம விருப்பதிற்கு அவங்க வாழ்க்கை திருப்பிறது தப்புஒருவேளை நாம அமைச்சி கொடுத்த வாழ்க்கை சரியில்லாம போனா அப்பயும் வருந்த பட போறதும் நாம தான்அதுக்கு இப்பயே சரியான வழிகாட்டுதாலோட அவனுக்கு பிடிச்ச பாதையில் போகட்டுமே”.

சரவணன் திரைபட கல்லூரியிலும்,சண்முகம் மருந்துவ கல்லூரியிலும் சென்னையில் சேர்ந்தங்க.

புதுச சிறகு முளைச்ச கிளி கண்டபடி பறக்கும் என்று பலரும் எதிர்பார்க்க ,பறப்பதையே மறந்திருந்த கிளி வழக்கம் போல் படிக்கும் வேலைய மட்டும் செய்தது.

படிப்பை முடிச்ச சண்முகம் மேற்படிப்பிற்காக அமேரிக்கா செல்ல,சரவணன் யாரிடமாவது அசிஸ்டாண்டாக சேர முயற்சி பண்ணிகிட்டு இருந்தான்.

படிப்பு சொல்லி கொடுத்த பேராசிரியாருக்குகாரியமே கண்ணாகயிருந்த சண்முகத்தை பிடித்து போய்விடதன் மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்காவில் தங்கிவிட விருப்பமா என கேட்டஅதுவரை தன் வாழ்க்கையில் விருப்பமா என்ற வார்த்தையை கேட்டுயிரத சண்முகம் உடனே ஒத்துகிட்டான்.

கல்யாணம் அமெரிக்காவில் நடக்கபோயிட்டு வந்த மணியாகாரர் ,அங்கு எடுத்த போட்டோவை எல்லாருக்கும் காட்டிட்டு இருந்தப்ப சிவசு முதல் படம் பாதியில் நின்றதால் வருத்ததிலிருந்த சரவணனுக்கு ஆறுதல் சொல்லிகிட்டு இருந்தார்.

ஊருக்கு அடிக்கடி வர முடியாத சண்முகம்,அப்பா தொலைச்ச முப்பது ஏக்கரை மனைவி பெயரில் திரும்ப வாங்கினான்.அதுக்கு நடுவே எப்பயாவது வந்து தங்க போற ஒருவாரத்திற்கு வீடு கட்டினான். புது வீட்டிற்கு மணியகாரர் குடி போன அன்னைக்கு தான் சிவசு இரண்டாவது முறையாக ஜானதிபதி விருது வாங்கினார்,முதல் தடவை வாங்கின நல்லாசிரியர் விருது விடமகன் அவன் படத்திற்கான விருதை தன்னை வாங்க சொன்னப்ப கம்பிரமாக வாங்கினார்.

முதல் முறையாக அட்டாக் வந்தவுடன்சரவணன் வற்புறுத்தி சிவசு வாத்தியாரை சென்னைக்கு தன்னுடன் இருக்க அழைத்து சென்றுவிட்டான் .

இன்னைக்கு தான் மணியகாரரை பார்க்க சரவணனோட வந்தார்.

திடீரினு ஒப்பாரி சத்தம் அதிகமானதுஉள்ளேயிருந்து வந்த சரவணனை சிவசு பார்த்தார்ஆமாம் என்று தலையாட்டினான்.அருகில் வந்து அவர் எழுந்திருக்க கை கொடுத்தான்.

சண்முகம் என்ன சொன்னான்??”

டிக்கெட் கிடைக்கலையாம்நம்மளையே பார்த்துக்க சொல்றான்,உதவிக்கு ஆள் அனுப்புறதாக சொன்னான்”

எதுக்கு அவனுக்கு பதில்,இவன் கொள்ளி போடுவனா ?” 
கேட்டுட்டு கோபமாக நண்பனை பார்க்க உள்ளே சென்றார்.

சற்று நேரத்தில் டை காட்டின ஒருவன் காரிலிருந்து இறங்கினான்சரவணன் யார் என்று கேட்க ,கூட்டம் வழிகாட்ட ,சரவணன் அருகில் வந்து

“ சார்சண்முகம் சார் போன் பண்ணியிருந்தார்,எங்க ஃப்யூனல் சர்விஸில் முன்னாடியே சொல்லியிருந்தார்மயானத்தில் சொல்லியாச்சு,ஏற்பாட்டை ஆரம்பிச்சியிருப்பங்கபல்லாக்கு கிராண்டாக இருக்கனும் சொல்லியிருக்கார்பூவோட இப்ப ஆளுங்க வந்திருவங்கநூத்தம்பது பேருக்கு சாப்பாடு வந்திரும்,கொள்ளி வைக்க அவங்க பங்காளி குமார் வருவாருனு சொல்லியிருக்கார்அப்படி அவர் வரலைன உங்களால் வேற ஆளை ஏற்பாடு பண்ண முடியுமா??” என்று படபடன்னு கேட்டான்.

ராக்காயி பாட்டி இறந்தப்புறம் சில வருடங்களா ஊர் மறத்து போயிருந்த ஓப்பாரி பாட்டை மணியகாரர் சாவில் தான் திரும்ப கேட்டது, அதுவும் காரில் வந்து ஓப்பாரி பாடிய குழுவை ஆச்சரியாத்தோட பார்த்தது.

“சண்முகம் அப்பனை தடாபுடலாக தான் வழி அனுப்புறான், அவன் வந்திருந்த இன்னும் ஆத்மா சந்தோஷதோட போயிருக்கும்,ஊரும் தப்பா பேசியிருக்கது”

“ஊர் தப்பா பேசுறதை கேட்டு வருத்தபட மணியக்காரர் இல்லை , அவர் மகனும் இனிமேல் ஊர் பக்கம் வரபோவதில்லை ,பேசாம ஆக வேண்டிய காரியத்தை பாருங்க”

சொன்ன மாதிரி எல்லாம் வேலையும் நடந்துவிட ஊர்வலம் புறப்பட்டது,மயானத்தில் சிரித்த முகத்தோட டை கட்டியவன் எல்லா வேலையும் செய்யறது ஊருக்கு புதுச இருந்தது.

சண்முகம் ஸ்கைப்பில் நேரடியாக பார்க்க , பங்காளி கொள்ளி வைத்தவுடன் ,சிவசு வாத்தியார் பக்கத்திலிருந்த அவனிடம்
“ உள்ளுர் ஆத்தில அஸ்திய கரைக்கனும்” என்றார் மெதுவாக

“ மொத்தம் மூணு செட் எடுக்க சொல்லியிருக்கேன்உள்ளூர் ஆத்திலும்கங்கையிலும்ராமேஸ்வரத்திலும் எங்க கம்பெனியே எல்லா சம்பிரதயத்தை பண்ணிரும்மொத்த பேக்கேஜுக்கு தான் சண்முகம் சார் பணம் காட்டியிருக்கார்”

சிவசு வாத்தியார் எதுவும் பேசமால் திரும்பினார்.

எங்க கம்பெனியில் நிறைய பேக்கேஜ் இருக்கு,தேவைபட்ட கூப்பிடுங்க சார்” என்றபடி தன் விசிட்டிங் கார்டை நீட்டினான்.

தலையைட்டி மறுத்துவிட்டு சரவணன் கைய பிடித்து அவனின் தோளில் சாய்ந்தபடி நடக்க ஆரம்பித்தார் .
Read more...