சிறுகதைப் போட்டி 2016,தந்தை போட்டிச் சிறுகதை,
Rate this posting:
{[['
']]}
அப்பாவும் இரண்டு கனவுகளும்
எப்போதும் படிக்கும் செய்தித் தாள் தான்., இன்று அதைப் படிக்க விரித்தபோது அதிலிருந்து விழுந்த ஒரு துண்டுப் பிரசுரம் என் வாழ்க்கயையே மாற்றப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை."கனவுகளை நிஜமாக்க வேண்டுமா?" என்ற பெரிய தலைப்பைப் பார்த்ததும் ஏதோசுயமுன்னேற்ற வகுப்புக்கான விளம்பரம் போல எனக் கொட்டாவியுடன்புறக்கணிக்கப் போனவனைத் தடுத்தது அந்த வாசகம்.சற்றே சிறிய எழுத்தில், "நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டுமா? அல்லதுஜெனிஃபர் லாரன்ஸுடன் செல்ஃபி எடுக்க வேண்டுமா? அனுகுங்கள் உங்கள் ட்ரீம்மேக்கரை" அதன் கீழே இன்னும் சிறியதாய் "உறக்கம் இல்லாமல்துன்பப்படுபவர்களுக்கு உறக்கத்தோடு நல்ல கனவுகளையும் அருளும் உங்கள்ட்ரீம் மேக்கர், அருளானந்தம்" அனுகவும் என்று போட்டு போல்ட் எழுத்தில்,நம்பர்21, குஜராத்தி தெரு, வட்டம்-16, நெய்வேலி நகரியம். என்றிருந்ததுவாட்ஸாப் எண்ணுடன்.எனக்கு ஏன் இந்தக் ட்ரீம் மேக்கர் இவ்வளவு முக்கியமான செய்தியாகப்படுகிறார் என்பதற்கு அதிமுக்கியமான காரணம் உண்டு.அது அகல்யா..இந்த உலகத்திலுள்ள முன்னூற்றி என்பது கோடிக்கும் சொச்ச பெண்களில் நான்எனக்கெனத் தேர்ந்தெடுத்தப் பெண்.“அழகான பெண்கள் எல்லாம் எனக்கு உன் சாயலிலே இருக்கின்றனர்., உன்சாயலிலுள்ளவர்கள் எல்லோருமே பேரழகிகளாக இருக்கின்றார்கள்” என நான்அவளிடம் சொன்ன போது வெட்கத்துடன் புன்னகைத்தாள். ஆம், என்னைப் போலவேஅவளுக்கும் என் மேல் காதல் உண்டு. ஆனால் நாங்கள் காதலர்களாக இல்லை.காரணம் அவள் அப்பா..எஞ்சினியரிங் ஃபைனல் இயரில் சென்னை ஐ.ஐ.டி.யிலிருந்து வந்திருந்தகல்ச்சுரல் அழைப்பிற்கு ப்ராஜக்ட் வேலைகளைத் தள்ளி வைத்து விட்டு வேகவேகமாக மைக்ரோ, நானோ அண்ட் மோர்.. என்னும் தலைப்பில் ஆர்டிகல் தயார்செய்து கொண்டு போனது வெறும் பேப்பர் பிரசண்டேஷனுக்காக மட்டுமில்லை அங்குபடிக்கும் அனைத்திந்திய அழகிகளுக்காவும் தான். அடர்ந்த பூவரசுமரங்களுக்கு இடையில் கதிரவன் பொன்னொளி பாய்ச்சும் எற்பாடு காலத்தில்நான்கு அழகிகளுக்கு நடுவே பேரழகியாக அவளைப் பார்த்தேன். பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவளை தவற விட்டேன். கண்டதும் காதலெல்லாம் படங்களில்மட்டுமே என எண்ணுபவன் நான், ஆகவே மறுபடியும் காண இன்னும் இரண்டு நாட்கள்அந்த வளாகத்திலேயே சுற்றினேன் அவளைக் காண முடியவில்லை, ஆனால் சிலதோழிகளின் நட்பு கிடைத்தது இருந்தும் அவள் பேர் தெரியாமல், ஊர் தெரியாமல்அவர்களாலும் ஏதும் உதவ முடியவில்லை. சில மாதங்கள் கழித்து தோழி ஒருத்திகட்செவி அஞ்சலில் அனுப்பிய குரூப் போட்டோவில் சற்று ஓரமாய் அவள் முகம்.."கடவுள் இருக்கான் குமாரு" என ஃபீல் பண்ண வைத்த நிமிடம். பின் தொடர்புஎன் வாங்கினேன். நேர்மையான ஒரு ப்ரபோசல், உண்மையான சில வார்த்தைகள்,நம்பிக்கைக்குரிய சில நண்பிகளின் உதவி மூலமாக எனக்கும் அவளுக்குமான நட்புகாதல் என ஆரம்பித்தால் நட்பு முறிந்துவிடும் என்ற உறுதிமொழியொடு வேர்விட்டது ஆழமாக.. ஆம் கன்னியம் தவறாத வெறும் நட்பு மட்டுமே..ஓராண்டுக்கும் மேலாய் எங்களின் நட்பு உறுதியாக போய்க்கொண்டிருந்தது..அவளுக்கும் என் மேல் விருப்பம் வளர்வதாய்த் தோன்றியது, நான் படிப்பைமுடித்து வேலைக்காக முயன்று கொண்டிருந்தேன். வேலை மட்டும் கிடைத்துவிட்டால் அவள் வீட்டில் நேராகப் போய் பெண் கெட்டுவிடலாம் என்று இருந்தபோது.. வாட்ஸ் ஆப்பில் அனுப்பினாள் ஆப்பினை.,"எங்க வீட்ல எனக்கு பையன் பாத்திருக்காங்க"திக்கென இருந்தது, இருந்தும் சமாளித்து "எங்க வீட்ல கூட எனக்கு பொண்ணுபாக்குறாங்க நா பேச சொல்லட்டுமா வீட்லேர்ந்து?" என்றேன்."வெளையாடாதீங்க.. அம்மாவோட ஃப்ரண்டோட பையன்.. எஞ்சினியரிங் முடிச்சிட்டுசொந்தமா பிசினஸ் பண்றாங்க போல.. அம்மாக்கு ரொம்ப புடிச்சிருக்கு..படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு சொல்றாங்க ""பையன் பேரென்ன?" என்றேன்."திலீப் குமார்""உனக்கு புடிச்சிருக்கா?"பதில் ஏதும் இல்லை அவளிடமிருந்து."ஒரு அஞ்சு நிமிஷம் பேசனும், கால் அட்டெண்ட் பண்றியா?""ஹ்ம்ம்.." என்றாள்.போன் செய்தேன், எடுத்தாள்."உனக்கு என்ன புடிக்குமா?" என்றேன் எடுத்த எடுப்பிலேயே.."ஏன் கேக்குறீங்க?""புடிக்குமா புடிக்காதா? பதில சொல்லு..""புடிக்கும்..."" நா உன்ன கல்யாணம் செஞ்சிகிட்டா உன்ன நல்லா பாத்துப்பேன்னு நம்புறியா?""ஹ்ம்ம்ம்..""ஹ்ம்ம்ம்னா என்ன அர்த்தம்? நம்பிக்க இருக்கா இல்லையா?""உங்கள விட என்ன நல்லா புரிஞ்சிக்க, பாத்துக்க யாராலயும் முடியாது..":அப்போ என்ன கல்யாணம் பன்னிக்க.. நா வீட்டுக்கு வந்து பேசுறன்..""நடக்காது.. ஒத்துக்க மாட்டாங்க.." அவள் குரல் கம்மியது."ஏன் வீட்டுக்கு லவ்லாம் புடிக்காதா?""அப்படி இல்ல.. அப்பா அம்மாவே லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..அம்மாவ கட்டிக்கிட்டா சொத்துல ஒரு பைசா கூட தர மாட்டேன்னு தாத்தாசொன்னப்ப அப்பா தன்னோட கோடிக்கணக்கான சொத்து தனக்கு வேண்டாமுன்னுசொல்லிட்டு வந்து எங்க அம்மாவ கல்யாணம் கட்டிகிட்டாரு.. ஆனா என்னோடரெண்டு வயசுலயே அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டாரு.. சொந்தக்காரங்கயாருமே உதவிக்கு வராதப்போ அம்மா மட்டுமே இரும்பு மனுஷி போல நின்னு என்னவளர்த்து ஆளாக்கியிருக்காங்க`` அவங்க கஷ்டபடுராப்ல நா ஏதும் பண்ணமாட்டேன்.." குரல் உடைந்து அழுகையை விழுங்கினாள்."அப்போ நான் அம்மாகிட்ட பேசுறன்.. உங்கள போல நா ரெட்டியார் கெடையாது..நாங்களாம் வன்னிய குல ஷத்ரியாஸ், ஆனா நீங்க பாக்குற எந்த ரெட்டியார் பையனவிடவும் உங்க பொண்ண நான் நல்லா பாத்துப்பேன்னு உங்க அம்மாகிட்ட சொல்றன்..அவங்க புரிஞ்சிப்பாங்க..""எங்க குடும்பத்துல வெளில யாரும் பொண்ணு கொடுத்ததோ எடுத்ததோ இல்ல, என்னாலசொந்தக்காரங்க முன்னாடி எங்க அம்மா தலை குனிஞ்சி நிக்கறத நா விரும்பல..புரிஞ்சிக்குங்க""ஒருவேளை இப்போ உன் அப்பா இருந்திருந்தா கண்டிப்பா அவருபுரிஞ்சிகிட்டிருப்பாரு" என்றேன் நிதேச்சையாய்.."இருந்திருந்தா நிச்சயம் நம்மள ஒத்துகிட்டிருப்பாரு தான்.. ஆனால்இல்லையே.. இப்படி ஒரு நிலை வந்துடக் கூடாதுன்னு தான் நான் அவ்வளவுவெலகியிருந்தேன்,, ஆனா....." வார்த்தைகள் அழுகையில் கரைந்துவிட்டிருந்தன..எனக்குப் புரிந்தது.. தன் வாழ்க்கையையே தன் மகளுக்காக அர்ப்பணித்த ஒருதாயின் மனதை வதைக்க விரும்பாத ஒரு பெண்ணின் அன்புக்குரியவனாக இருக்கிறேன்என்பது ஒரு புறம் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் ஒருங்கே கொடுத்தது.அதன் பின் நான் அவளிடம் பேசவில்லை.. அவளிடமிருந்து வந்த அழைப்புகளுக்கும்பதிலளிக்கவில்லை.. ஆனால் என் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தது, என் கனவிலும் நினைவிலும் அவளே நிறைந்திருந்தாள்..என்னுடன் பழகிய நாட்களில் எந்த ஒரு நிலையிலும் தன் நிலை மாறாத,பெண்மை எல்லை மீறாத, தன் குடும்பத்தின் பெருமை காக்க நினைக்கும் தங்கம்போன்ற இந்தப் பெண்ணை எவ்வாறு நான் இன்னொருவனுக்கு விட்டுத் தருவேன்? ஆயிற்று ஆறு மாதங்கள்.. இன்று இந்த விளம்பரம் எனக்குக் கொஞ்சம்நம்பிக்கையை அளித்தது.. முயற்சி செய்து தான் பார்ப்போமே..ட்ரீம் மேக்கர் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன், வரச் சொல்லியிருந்தார்..போனேன்..நீளமான வராந்தாவில் ஐந்து பேர் காத்திருந்தனர். 40 நிமிடங்கள்காத்திருப்பிற்குப் பின் உள்ளே அழைக்கப் பட்டேன். அருளானந்தம் நினைத்ததைவிட இளமையாய் இருந்தார், கடவுளின் தூதரைப்போலத் தோன்றினார் எனக்கு..தன்னுடைய ப்ராஜெக்ட் ரியாலிடி ட்ரீம் பற்றி சுருக்கமாய் விளக்கினார்..அடுத்த வருட நோபலுக்கு தன் பேரைப் பரிந்துரைக்க விவாதம் நடப்பதாகக்கூறினார்..பின் "இப்போ நான் உங்களுக்கு என்ன பண்ணனும்?" என்றார்.நான் அகல்யா அனுப்பியிருந்த அவளின் அப்பாவின் புகைப்படத்தைஎடுத்துக்காட்டி, இந்த மனிதரை ஒருவரின் கனவில் புகுத்தி எனக்கு சிபாரிசுசெய்ய வேண்டும். சாத்யமா?" என்றேன்."அது நீங்க எதுக்காகக் கேக்குறீங்கங்கறத பொருத்தது" என்றார்.மொத்தமும் சொன்னேன்.. மனிதர் உற்சாகமானார்.."மொத தடவையா ஒரு லவ் மேட்டருக்கு நம்ம டெக்னாலஜி ஹெல்ப் செய்யப் போகுது..இப்போ இது எப்படி வேலை செய்யுது, இதுக்கு என்னலாம் தேவைன்னு சொல்றன்,ஒருத்தங்க கனவுல ஒரு கேரக்டர அனுப்ப வெறும் போட்டோ மட்டும் இருந்தாபோதும் நாம என்ன கனவ உருவாக்க நெனைக்குறோமோ அத ப்ரோக்ராம் செஞ்சி ஒருகேப்ஸ்யூல் மாத்திரை போல ஆக்கிடுவோம், அத கனவு காண வேண்டிய நபரை சாப்பிடவெச்சிட்டா போதும்,. அந்த கேரக்டரோட குரல், நடை, உடை பாவனைகளெல்லாம்அவங்க மனசுல இருக்குற சப் கான்ஷியஸ் மைண்டே கொண்டு வந்துடும்,அவ்ளோதான்.. சிம்பிள்.. சரி பெயர் அட்ரெஸ்லாம் சொல்லுங்க.."சொன்னேன்."அட பாண்டிச்சேரியா!! உங்க வேலை முடிஞ்சுதுன்னே வெச்சிக்கோங்க.. நம்மடிரைவர் கம் அஸிஸ்டெண்ட் கந்தசாமி அந்த ஏரியாவாச்சே.. அங்க எல்லா எடமும்அவனுக்கு அத்துப்படி.. ரெண்டு நாள் கழிச்சி இதே நேரம் வாங்க.."இரண்டு நாட்கள் கழித்து போனேன்.அங்கு அந்த கந்தசாமி நின்றிருந்தான்.. பேரைக் கேட்டு ஒரு 50 வயது ஆளைக்கற்பனை செய்திருந்தேன். அவனுக்கு வெறும் 22, 23 தான் இருக்கும்..பார்த்ததும் வணக்கம் வைத்தான், அருளானந்தம் சிரித்தபடியே, ரெண்டே நாளில்கந்தசாமி மொத்த விசாரணையும் முடித்துவிட்டான்,“கந்தசாமி நீ என்னலாம் டீட்டெயில் கொண்டு வந்திருக்க சொல்லு பாப்போம்!""சார் அந்த அம்மா பேரு சுமதி, அரியான் குப்பத்துல ஃபேன்சி ஸ்டோர் ரன்பண்ணிட்டிருக்காங்க,டெய்லி சாயங்காலம் ஆறு மணிக்கு பக்கத்து வீட்டுப்பாட்டியோட ஆஞ்சனேயர் கோயில்லேர்ந்து தெப்ப கொளம் வரைக்கும் வாக்கிங்போவாங்க.. வெள்ளிக் கிழமை மட்டும் விரதம் அப்டிங்கரதால ஆஞ்சனேயர் கோயில்பக்கத்துல சானக்யா கஃபேயில ஒரு கப் பால் சாப்பிடுவாங்க.. கடையில வேலபாக்குற ரங்கராஜ் நம்ம ஃப்ரெண்டு தான் சார்.. வேலைய ஈசியா முடிச்சிடலாம்"என்று முடித்தான்.ஒரு மனிதனால் இரண்டே நாட்களில் இவ்வளவு விவரங்களை திரட்ட முடியுமா?ஆச்சரியத்துப் போனேன்."அது தான் கந்தசாமி.. வேலைன்னு வந்துட்டா நெருப்பு மாதிரி.. என்ன..கொஞ்சம் நியாபக மறதி.. அப்பப்போ, ஷாப்பிங்க் கூப்பிட்டு போயிட்டு நாமகடைக்குள்ள போயிட்டா திருப்பி வந்து ஆஃபீஸ்ல தேடிட்டிருப்பான்" என்றுசிரித்தார்."நாளன்னிக்கு வெள்ளிக்கிழமை.. அன்னிக்கே உங்க வேலையை முடிச்சிடலாம்போயிட்டு வாங்க தம்பி" என்று அனுப்பினார்."எனக்குப் பெரிதாய் நம்பிக்கை இல்லை.. என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம்என்று இருந்தேன்.ஆயிற்று வெள்ளிக்கிழமை, சனியும் வந்தது..மாலை ஐந்து மணி இருக்கும் அகல்யாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது..கிட்டதட்ட ஆறு மாதங்களுக்குப் பின்.."ஹலோ.." என்றேன்."எப்படி இருக்கீங்க?" குரலில் உற்சாகம் தொனித்தது.. என் பதிலுக்குகாத்திருக்கவே இல்லை.. "நேத்து என் கனவுல அப்பா வந்திருந்தாரு.." நான்ஆச்சரியமடைந்தேன்தொடர்ந்தாள், "கூடவே நீங்களும் வந்திருந்தீங்க..அவர் மொகம் எனக்கு சரியாதெரியவே இல்ல,, ஆனா அது அப்பா தான்.. என் கைய உங்க கைல புடிச்சிகொடுத்தாரு.. சட்டுன்னு முழிச்சிகிட்டேன்.. காலையில அம்மாகிட்ட என் கனவிலஅப்பா வந்தத சொன்னேன்..அம்மா ஷாக் ஆயிட்டாங்க.. உன் கனவிலயும் வந்தாராஅம்முன்னு கேட்டாங்க.. அப்பா அம்மா கனவில வந்து, " என் பொண்ணுக்கு நான்பையன் பாத்திட்டன்.. நீ வேற பையன தேடாத.. அவ சொல்லுற பையன கட்டி வைன்னுசொன்னாராம்""எனக்கு நெஜம் போலவே இருந்துச்சி அம்மு.. கனவு போலவே இல்லன்னு.." அம்மாகண்ணெல்லாம் தண்ணி.. அப்புறம் நா உங்களப் பத்தி சொன்னேன்.. அம்மாஒத்துக்கிட்டாங்க.. உங்களுக்கு வேலை கிடைச்சதும் வீட்டிலேர்ந்து வந்துபாக்க சொன்னாங்க.." அவளின் சந்தோஷம் எனக்கும் பற்றிக்கொண்டது..இதைப் போலஇனிய மொழிகள் உண்டோ? இதைப் போல் இனிய நாள் உண்டோ? அருளானந்தத்தைப்பார்த்து விஷயத்தைக் கூறி நிற்க வைத்து நெடுஞ்சாங்கிடையாய் விழுந்துஎழுந்தேன்.. புன்னகையுடன் ஆசிர்வதித்தார்.. சிறிது நேரத்திலெ அருளானந்தத்தின் போன் அழைத்தது, மறுமுனையில்கந்தசாமியின் மனைவி..“மாடியிலேர்ந்து விழுந்து காலை ஒடச்சிக்கிட்டாருங்க.. ஜிப்மருல சேத்திருக்கோம்..."அடப்பாவி இந்த நேரத்தில இப்படியா ஆகனும் இவனுக்கு என எண்ணிக்கொண்டார்.ஹாஸ்பிடலில் கந்தசாமியின் வலது காலைக் கட்டி மேலே நிறுத்தியிருந்தனர்...இவரைப் பார்த்ததும் பரிதாபமாய் சிரிக்க முயன்றான். டாக்டர் பெரிதாய்ஏதும் அடி இல்லை ஓரிரு வாரங்கள் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டுமென்றார்..பாவம் கந்தசாமி மனைவி, ரொம்பவும் சின்ன வயது.. பயந்திருந்தாள். கொஞ்சம்பணத்தைக் கந்தசாமி மனைவியிடம் தந்து பார்த்துக்கொள்ளும்படிசொல்லிவிட்டுக் கிளம்பினார். வழியில் ஆஞ்சனேயர் கோயில்., அருகே சானக்கியா கஃபே தெரிந்தது.. காரைநிறுத்தி இறங்கி உள்ளே நுழைந்து ஒரு இஞ்சி டீ ஆர்டர் செய்தார்,கொண்டு வந்தவனுக்கு கந்தசாமி வயது தான் இருக்கும்,, "ரங்கராஜா?" என்றார்"உனக்கெப்புடி சார் தெரியும்" என்றான் விழிகள் விரிய.கந்தசாமி தன்னிடம் வேலை பார்ப்பதைச் சொன்னார்."ஆமாம் எப்படியப்பா கந்தசாமிக்குக் கால் ஒடஞ்சிது?" என்றார்."அத்த ஏன் சார் கேக்குற.. அன்னிக்கு வெள்ளிக்கெழமை காத்தால வந்து ஒருமாத்திரைய கொடுத்து அந்த ஜிகினா பொட்டு கடை வெச்சிருக்கிற அம்மாசாப்புடுற பாலுல கலந்து தந்துடுன்னு சொன்னாப்டி..நா முடியாதுன்னுட்டேன்..அப்புறம் பிரச்சனைல்லாம் ஏதும் வராது, அது சும்மா சத்து மாத்திரை தான்னுசொல்லி ஆயிரம் ரூவா காசும் தந்தாப்டி.. சரி நானும் ஃப்ரெண்டுசொல்லுறானேன்னு ஒத்துகிட்டேன் சார்.. அந்த அம்மா வந்தப்போ நானும்மத்திரைய கலக்கி ரெடியா வெச்சிருந்தேன், அந்த நேரம் பார்த்து கரெக்டாகந்தசாமி வந்து ஒரு கப் பால் வேனும்னு கேட்டாப்டி.. நாபோட்டுத்தரதுக்குள்ள அந்தம்மாவுக்கு போட்டப் பால சாப்டுட்டு அவசர அவசரமாகாசு கூட கொடுக்காம ஒயின் ஷாப் பக்கமா கெளம்பிட்டாப்டி.. என்னாத்தசொல்லுறது.. காத்தால பாத்தா அவன் பொண்டாட்டி வந்து கதறுது..என்னான்னுபோயி கேட்டா, நைட் மாடியில படுத்துக்கிட்டிருந்திருக்கும் போதுசெத்துப்போன அவங்க அப்பா மகனே கீழ குதி கீழ குதி நா புடிச்சிக்கிறேன்னுசொன்னாப்டியாம் இவனும் குதிச்சிட்டானாம்.. நெசத்துல நடந்தாப் போலவேஇருந்துச்சின்னு சத்யம் பன்னுறாப்டி.. குடிக்கலாம், அதுக்காக மனுசன்இப்டி நெலவரம் தப்புராப்போலவா குடிக்கிறது? நீயே சொல்லு சார்..!"
Read more...